வளைவுற்றனர் - ஆகாயத்தில் சூழ்ந்து கொண்டவர்களான; நளிர் முப்புரர் என - பெரிய திரிபுரத்து அசுரர்களைப் போல (அச் சேனைத் தலைவர் பதினால்வரும்); வள்ளலை மதியார் - இராமபிரானை (ஒரு பொருட்டாக) மதியாதவர்களாய்; ஆகத்து எழு கனல் - அவர்களுடைய உடலிலிருந்தெழுந்த கோபத் தீ; கண் வழி உக - கண்களின் வழியாகச் சிந்தும்படி; எதிர் உற்று அழன்றார் - எதிர்த்து வந்து சீற்றம் கொண்டவர்களாய்; மேகத்தினை நிகர் - காள மேகத்தைப் போன்ற; வில்லியை வளைத்தார் - வில் வீரனான இராம பிரானைச் சூழ்ந்து கொண்டு; செரு விளைத்தார் - போர் செய்தார்கள். முன் காலத்தில் திரிபுரத்து அசுரர்கள் சிவபெருமானை வளைத்துக் கொண்டு செரு விளைத்தது போலச் சேனைத் தலைவர் பதினால்வர் இராமபிரானை வளைத்துக் கொண்டு போர் விளைத்தார் என்பது. தனி வில்லி - வேறு துணை எதுவுமில்லாமல் தனித்துப் போருக்குச் சென்ற வில் வீரன். இராமனுக்கு மேகம் - கருநிறத்தாலும், (அம்பு) மழை பொழிவதாலும், வில்லைப் பெற்றிருப்பதாலும் உவமையாகும். முப்புரம் : இரும்பாலும் செம்பாலும் பொன்னாலும் அமைந்து, நினைத்த இடத்திற்கு எழுந்து பறக்கக் கூடிய சக்தியமைந்த கோட்டைகளால் அமைந்த ஊர்கள்; இம் முப்புரங்களையும் அவற்றிற்குரிய வித்யுந்மாலி, தாருகாட்சன் கமலாட்சன் என்னும் மூன்று அசுரர்களையும் சிவபிரான் தன் சிரிப்பால் தீயெழச் செய்து அழித்தான் என்பது புராண வரலாறு. சிவனின் பெருமையறியாமல் அவனை எதிர்த்துப் பின்பு அழிந்த திரிபுரர் போல அரக்கர் படைகள் இராமனை வளைத்து நின்று அழிவுற்றனர் என்பது குறிப்பு. நாகம் : பல பொருள் குறித்த திரிசொல்; இங்கு மலையைக் குறிக்கும். 97 | 2972. | எய்தார் பலர்; எறிந்தார் பலர்; மழு ஓச்சினர்; எழுவால் பொய்தார் பலர்; புடைத்தார் பலர்; கிடைத்தார் பலர்; பொருப்பால் பெய்தார் மழை; பிதிர்த்தார் எரி;-பிறை வாள்எயிற்று அரக்கர்- வைதார் பலர்; தெழித்தார் பலர்; மலை ஆம் என வளைத்தார். |
பிறை வாள் எயிற்று - பிறைச் சந்திரனைப் போன்ற கோரப் பற்களையுடைய; அரக்கர் பலர் - (சேனைகளுடன் வந்த) அரக்கர்களில் அநேகம் பேர்; எய்தார் - (இராமன்மேல்) அம்புகளை எய்தார்கள். பலர் எறிந்தார் - (வேல் முதலிய ஆயுதங்களை) வீசினார்கள்; (பலர்) மழு ஓச்சினர் - (பலர்) மழுவென்னும் ஆயுதங்களைச் செலுத்தினார்கள்; பலர் எழுவால் பொய்தார் - பலர் வளைதடிகளால் தாக்கினார்கள்; பலர் புடைத்தார் - பலர் ஆயுதங்களால் அடித்தார்கள்; பலர் கிடைத்தார் - பலர் எதிர்த்து நெருங்கினார்கள்; பொருப்பால் மழை பெய்தார் - மலைகளையெடுத்து மழை |