| | மேல் பொத்தின குழு விண்ணவர் விழி பொத்தினர்; விரை வெங் கால் பொத்தினர் நமன் தூதுவர், கடிது உற்று, உயிர் கவர்வார். |
மால் பொத்தின - மயக்கம் நிறைந்த; மறவோர் உடல் - கொடிய அரக்கர்களின் உடம்பில்; மழை பொத்தின - அம்பு மழை துளைத்தன; வழி செம்பால் பொத்தின - வழிகின்ற இரத்தப் பெருக்கு நிறைந்ததுவாய்; நதியின் கிளர்படி பொத்தின - ஆறுகள் போல விளங்கும் பூமியை மறைத்தது; படர் வான் மேல் பொத்தின - பரந்த வானத்தின் மேல் நிறைந்த; குழு விண்ணவர் - கூட்டமாகவுள்ள தேவர்கள்; விழி பொத்தினர் - (போரின் உக்கிரத்தைக் காண விரும்பாமல்) கண்களை மூடிக் கொண்டார்கள்; நமன் தூதுவர் - யமதூதர்கள்; விரை வெங்கால் பொத்தினர் - விரைவாக வீசும் கொடிய காற்றையொத்தவர்களாய்; கடிது உற்று - விரைவாக வந்து; உயிர் கவர்வார் - அரக்கருயிரைப் பறிப்பவர்களாயினர். வீரர்களை மலைகளுக்கு உவமித்ததற்கேற்ப, அவர்களின் உடல்களிலிருந்து பெருகியோடும் இரத்த வெள்ளத்தை நதிகளாகக் கூறினார். நமன் தூதுவர் தூது பொருந்தியது - அவர்களின் மிகுதியையும், அவர்களின் கால்களால் அந்தப் போர்க்களம் மூடுண்டதையும் அரக்கர்களின் அழிவு மிகுதியையும் அறிவிப்பது. பொத்துதல் - நிறைதல், மறைதல், மூடுதல் மழை - மழை போல் சொரிந்த அம்புத் தொகுதி : உவமையாகுபெயர். செம்பால் - இரத்தம். 'விரை வெங்கால் பொத்தினர் கடிதுற்று' - 'விரைந்து செல்லும் தன்மையுள்ள கொடிய தம் கால்களை அடித்துக் கொண்டு விரைந்து வந்து' எனப் பொருள் உரைப்பினும் அமையும். 100 | 2975. | பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பில வாய், நாய் ஏறின; தலைமேல் நெடு நரி ஏறின; எரி கால் வாய் ஏறின வடி வாளியின் வான் ஏறினர், வந்தார்; தீ ஏறு, இகல் அரி ஏறு என, முகில் ஏறு எனச் செறிந்தார். |
பேய் ஏறின - பேய்கள் கூட்டமாக வருவதற்குக் காரணமான; செரு வேட்டு - போரை விரும்பி; எழு பித்து ஏறினர் - எழுகின்ற பைத்தியம் பிடித்த அரக்கர்களின்; பில வாய் - மலைக் குகை போல (ஆழ்ந்து அகன்ற) வாய்களின் மேல்; நாய் ஏறின - பல நாய்கள் எறின; தலை மேல் நெடுநரி ஏறின - தலைகளின் மேல் பெரிய நரிகள் வந்து ஏறின; தீ ஏறு (என) - |