பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 321

வனும்; வைத்தலைப் பகழியால் - கூரிய நுனிகொண்ட அம்புகளால்;
மழை செய் வில்லினான் - மழை பொழிகின்ற வில்லையுடையவனும்;
முக்கணான் கைத்தலை - மூன்று கண்களையுடையவனான சிவபிரானின்
கையிலுள்ள; சூலமே அனைய காட்சியான் - சூலம் போன்ற
தோற்றத்தையுடையவனுமாகிய; முத் தலைக் குரிசில் - மூன்று
தலைகளையுடைய திரிசிரா என்னும் வீரனாவான்.

     திரிசிரா என்னும் படைத் தலைவனின் தன்மையை இப் பாடல்
கூறுகிறது. மூன்று தலைகளைக் கொண்டமைக்கும். அழித்தல் தொழில்
செய்யுங் கொடுமைக்கும் சிவபெருமானின் சூலம் உவமையாயிற்று.     113

2988. அன்னவன் நடுவுற,
     'ஊழி ஆழி ஈது'
என்ன, வந்து, எங்கணும்
     இரைத்த சேனையுள்,
தன் நிகர் வீரனும்,
     தமியன், வில்லினன்,
துன் இருள் இடையது ஓர்
     விளக்கின் தோன்றினான்.

    அன்னவன் நடுவுற - அத்தகைய திரிசிரன் என்பவன் நடுவிலே
பொருந்தியிருக்க; 'ஊழி ஆழி ஈது' என்ன - ஊழிக் காலத்துப்
பெருங்கடல் இதுவென்று சொல்லும்படி; எங்கணும் வந்து - எல்லாப்
பக்கங்களிலும் வந்து; இரைத்த சேனையுள் - ஆரவாரித்த அரக்கர்
சேனையிலே; தன் நிகர் வீரனும் - (வேறு உவமையில்லாது) தன்னைத்
தானேயொத்த வீரனான இராமனும்; தமியன் வில்லினன் - தனியே
வில்லையேந்தியவனாய்; துன் இருள் இடையது - அடர்ந்த இருளின்
நடுவேயுள்ள; ஓர் விளக்கின் - ஒரு விளக்குப் போல; தோன்றினான் -
விளங்கினான்.

     திரிசிரா நடுவிலே பொருந்திய அரக்கச் சேனைகள் தன்னைச் சூழ்ந்து
நிற்க அவர்களுக்கு நடுவே இராமபிரான் இருளிடையே தோன்றும்
விளக்குப் போல விளங்கினான் என்பது.                          114

சேனையோடு திரிசிராவை இராமன் எதிர்த்துப் பொருதல்

2989. ஓங்கு ஒளி வாளினன்,
     உருமின் ஆர்ப்பினன்,
வீங்கிய கவசத்தன்,
     வெய்ய கண்ணினன்-
ஆங்கு-அவன் அணிக்கு எதிர்
    அணிகள் ஆக, நேர்