இழந்தானில்லை; தோள் வலி இழந்திலன் - தோள்களின் வலிமையையும் இழந்தானில்லை; சொரியும் கல் இழந்திலன் - (இராமன்மேல்) பொழியும் கற்களை இழந்தானில்லை; கறங்கு எனத் திரிதல் இழந்திலன் - காற்றாடி போலச் சுழன்று திரிவதையும் விட்டுவிட்டானில்லை. வில் ஒழிந்த பின்பும் அத் திரிசிரன் அச்சமின்றி வீரமொழிகளைப் பேசிக் கொண்டு, தான் ஒருவனே எல்லாப் பக்கமும் சுற்றி வந்து தோள் வலிமையால் கற்களையெடுத்து இராமன் மேல் சொரிந்தான் என்பது. கறங்கு : காற்றாடி. அவன் முகத்தில் ஒளி இழவாமையையும், மனத்தில் துணிவு இழவாமையையும் அறியக் கிடத்தலை விளக்குவார் 'முகத்தின் எல் இழந்திலன்' என்றார். எல் - விளக்கம், ஒளி. 133 | 3008. | ஆள் இரண்டு-நூறு உள என, அந்தரத்து ஒருவன் மூள் இரும் பெரு மாய வெஞ் செரு முயல்வானை, தாள் இரண்டையும் இரண்டு வெங் கணைகளால் தடிந்து, தோள் இரண்டையும் இரண்டு வெங் கணைகளால் துணித்தான். |
அந்தரத்து - ஆகாயத்திலே; ஒருவன் - தான் தனியொருவனாக நின்று கொண்டு; இரண்டு நூறு ஆள் உள என - இருநூறு வீரர்கள் உள்ளார்கள் என்று தோன்றும்படி; மூள் இரும்பெரு மாய வெஞ் செரு முயல்வானை - தொடங்கிய மிகப் பெரிய மாயம் நிறைந்த கொடிய போரைச் செய்கின்ற திரிசிரனை; தாள் இரண்டையும் - (இராமபிரான்) இரண்டு கால்களையும்; இரண்டு வெங்கணைகளால் தடிந்து - கொடிய இரண்டு பாணங்களால் துண்டித்து; தோள் இரண்டையும் - இரண்டு தோள்களையும்; இரண்டு வெங்கணைகளால் துணித்தான் - கொடிய இரண்டு அம்புகளால் துண்டித்தான். தான் ஒருவன் போர் செய்தலே இருநூறு பேர் போர் செய்வது போலத் தோன்றும்படி பெரு மாயையால் கடும் போர் செய்த திரிசிரன் என்னும் அரக்கனை, இராமன் தன் பாணங்களால் மாயையையொழித்துத் தாள்களையும் தோள்களையும் துணித்தான் என்பது. செரு என்னும் ஒரு சொல்லுக்கு மூள், இரும், பெரு, மாய, வெம் என ஐந்து அடைமொழிகள் தந்து மாயப் போர் செய்த திரிசிரன் மறம் புலப்படுத்தினார் கம்பர். ஆள் - வீரன். இரும் - பெரிய. 134 திரிசிரா மடியக் கண்ட அரக்கர்கள் சிதறியோடுதல் | 3009. | அற்ற தாளொடு தோளிலன், அயில் எயிறு இலங்க, |
|