| | நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை நிலை அறியா; மாயை இது என்கொலோ?- வாராதே வரவல்லாய்! |
வாராதே வரவல்லாய் - (அடியார்க்கு) வருதற்கு 'அரியார் போலிருந்து மிக எளியார்போல் வரும் வல்லமை உடையானே!; தாய் தன்னை அறியாத கன்று இல்லை - தன் தாயைத் தெரிந்து கொள்ளாத கன்று இல்லை; தன் கன்றை ஆயும் அறியும் - (அதுபோல்) தாயும் தன் கன்றை அறிந்து கொள்ளும்; ஐய! -தலைவனே!; உலகின் தாய் ஆகின் எப்பொருளும் நீ அறிதி - எல்லா உலகங்களுக்கும்அன்னை ஆனதால் எல்லாப் பொருள்களையும் நீ அறிகிறாய்; அவை உன்னை நிலை அறியா - அப்பொருள்கள் உன் தன்மையை அறியாதுள்ளன; மாயை இது என் கொலோ? - இம்மாயச் சுழல்எதுவோ? (என்னால் அறிய முடியவில்லை). வாராதே வரவல்லாய் என்பதை வந்தாய் போல வாராதாய் வாராதாய் போல் வருவானே' என்றபெரியார் திருவாய்மொழிப் பாசுரத்துடன் (60 : 9) ஒப்பிடின் மேலும் தெளிவுகிட்டும். தாய்தன்னைக் கன்றறிவதை நாலடியாரும் கூறும் (101). ஆயின் உயிர்களை நீ படைத்தாலும் அவை உன்னை அறியவில்லை. நீயோ எல்லாம் அறிந்தவன். 54 | 2571. | "பன்னல் ஆம்" என்று உலகம் பலபலவும் நினையுமால்; உன் அலால் பெருந் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே; அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்மாட்டு அருந் தெய்வம் நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ? |
உலகம் - உலகமக்கள்; "பன்னல் ஆம்" என்று - துதிக்கலாம் என்று; பலபலவும் நினையும் - பல்வேறு தெய்வங்களை நினைப்பர்; (ஆனால்); உன் அலால் பெருந்தெய்வம் உயர்ந்துளோர்ஒழுக்கு அன்றே - உன்னைத் தவிர வேறு பெரிய கடவுள் உண்டெனக் கருதல் உயர்ந்த ஞானியரின்செயல் அன்று; அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர் மாட்டு - அன்ன வாகனமுடைய பிரமனைமுதலாகக் கொண்ட அந்தணர்களால்; அருந்தெய்வம் நின் அலால் இல்லாமை - வழிபடும் அரிய கடவுள் உன்னை அல்லாமல் வேறு இல்லா உண்மையை; நெறிநின்றார் நினையாரோ? - பலசமய நெறி |