| 3021. | 'ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ? அயில் வேல் வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ?-வெறிப் போர்த் தீர வாழ்க்கையின் தேவரைச் செருவிடைப் பறித்த வீர வாட் கையீர்!-எங்ஙனம் வாழ்திரோ? விளம்பீர்.' |
'வெறிப் போர் - மூர்க்கச் செயலை மேற் கொண்ட போரில்; தீர வாழ்க்கையின் - வீரத்தோடு கூடிய வாழ்வினால்; தேவரைச் செரு விடைப் பறித்த - தேவர்களிடமிருந்து போரில் பறித்துக் கொண்ட; வீர வாள் கையீர் - வலிமையுள்ள வாளைக் கையில் ஏந்தியவர்களே!; (போரில் தோற்றோடிப் போர்த் தருமத்தையிழந்த நீங்கள் போர்த் தொழிலை விட்டு); ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ - இனி முத்து முதலிய பண்டங்களை விற்று வாழும் வணிகர்களாக அமைவீர்களோ? (அல்லது); அயில் வேல் வீர வாள் - (உழவராகிக்) கூர்மையான வேலையும், வலிமையுள்ள வாளினையும்; கொழு என மடுத்து உழுதிரோ - ஏரின் கொழுவாக மண்ணில் ஆழ்த்தி உழுது பயிரிடப் போகிறீர்களோ?; எங்ஙனம் வாழ்திரோ - எவ்வாறு வாழப் போகின்றீர்கள்?; விளம்பீர்' - சொல்லுங்கள். இவ்வாறு போரில் தோற்றோடி வெட்கங் கெட்ட உங்களுக்குப் போர் வீரராக வாழ வகையில்லை : இனி, நீங்கள் பண்டங்களை விற்று வாழும் வணிகராகவோ, உழுதுண்டு வாழும் வேளாளராகவோ வாழ்வதே உங்களுக்கு அமைவது என்றான். கையீர் - விளி; ஓ - ஐயம். 147 தூடணன் எதிர்த்து வர, இராமன் அவனோடு போர்தொடங்குதல் | 3022. | என்று, தானும், தன் எறி கடற் சேனையும், 'இறை நீர் நின்று காண்டிர் என் நெடுஞ்சிலை வலி' என நேராச் சென்று தாக்கினன்; தேவரும் மருள்கொண்டு திகைத்தார்; நன்று! காத்தி' என்று, இராமனும் எதிர் செல நடந்தான். |
என்று - இவ்வாறு தூடணன் கூறி; 'நீர் இறை நின்று - நீங்கள் சிறிது நேரம் ஓடாது நின்று; என் நெடுஞ் சிலை வலி - எனது நீண்ட வில்லின் வலிமையை; காண்டிர்' என - காண்பீர்களாக என்று சொல்லி; தானும் தன் எறிகடல் சேனையும் - தானும் தன்னுடைய அலை வீசும் கடல் போன்ற |