பக்கம் எண் :

சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 35

நின்றவர்கள் எண்ணிப் பாராரோ? (பிறநெறியில் சென்று உண்மை அறியாது
உள்ளனர்என்ற குறிப்பைப் புலப்படுத்தும்)

     பன்னுதல் - பல முறை கூறல். ஒழுக்கு - ஒழுக்கம். நடை, ஆசாரம்,
அந்தணர் - அழகியதட்பத்தை உடையவர், ஆல், ஏ - அசைகள்      55

2572.பொரு அரிய சமயங்கள்
     புகல்கின்ற புத்தேளிர்
இரு வினையும் உடையார்போல்,அருந்தவம்
     நின்று இயற்றுவார்
திரு உறையும் மணி மார்ப! நினக்கு
     என்னை செயற்பால?
ஒரு வினையும் இல்லார்போல்
     உறங்குதியால்-உறங்காதாய்!

    திரு உறையும் மணிமார்ப! - திருமகள் தங்கிய அழகிய மார்பை
உடையவனே!; பொரு அரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர்-
ஒப்பில்லாத பிறமதங்கள் சிறப்பித்துக் கூறும் தெய்வங்கள்; இருவினையும்
உடையார்போல் -
நல்வினை தீவினை என்பவற்றைக் கொண்ட எளிய
மக்கள் போல; அருந்தவம்நின்று இயற்றுவார் - செயற்கரிய தவம்
செய்கின்றவர் ஆவார்; நினக்கு என்னைசெயற்பால? - உனக்குச் செய்ய
வேண்டிய தவம் என்ன உள்ளது? (ஒன்றுமில்லை) (ஆயினும்); உறங்காதாய்-
தூக்கமின்றி விழிப்பு நிலையில் உள்ளவனே!; ஒரு வினையும் இல்லார்
போல் உறங்குதியால் -
எந்த ஒரு செயலும் இல்லாதவர் போலத்
தூங்குகிறாய். ஆல்ஈரிடத்தும் அசை.

     'இருள்சேர் இருவினை' (குறள். 5) என்ற குறளடியை ஒப்பு நோக்க
இடமுளது. மற்ற சமயத்தெய்வங்கள் தவம் செய்வதால் அவர்கள்
இருவினைப்பட்டவர் ஆவர். எனவே அவர்கள் பரம்பொருள்ஆகார்.
மணிமார்பு என்பதைக் கவுத்துவமணி அணிந்த மார்பு எனவும் கூறுவர்
உறக்கம் - அறிதுயில்யோக நித்திரை, உறங்குவான் போல் யோகு செய்த
பெருமானை (5: 4: 11) என்பது ஆழ்வார்.பாசுரம். திருமாலுக்கு
ஒருவினையும் இல்லை என்பது பெறப்படும். பிற தெய்வம் புரியும் தவம்
போன்றது அன்று யோக நித்திரை. போல் - இரண்டிடத் தும்ஒப்பில்
போலி                                                       56

2573.அரவு ஆகிச் சுமத்தியால், அயில்
     எயிற்றின் ஏந்துதியால்,
ஒரு வாயில் விழுங்குதியால், ஓர்
     அடியால் ஒளித்தியால்-
திரு ஆன நிலமகளை; இஃது
     அறிந்தால் சீறாளோ