துடித்தன - அன்னவரின் சிறுகுடல்களும் துடித்தன; தசைத் தோல் துடித்தன - தசையோடு பொருந்திய தோல்களும் துடித்தன; கழல் துணை துடித்தன - இரண்டு கால்களும் துடித்தன; இடத் தோள் துடித்தன - இடப் புறத்துத் தோள்களும் துடித்தன. தேர் துடித்தல் - தேர் துள்ளிக் கீழே விழுந்ததைக் குறிக்கிறது - முறிந்து விழுதல்.இடத்தோள் துடித்தன - சாகாத அரக்கர்களின் இடத்தோள் துடித்தன - ஆடவர்க்கு இடத்தோள்துடித்தல் தீ நிமித்தமாம். சொற்பொருட் பின்வருநிலையணி - துடித்தன : பன்முறை ஒரே பொருளில் அடுக்கி வந்தது. 165 | 3040. | வாளின் வனம், வேலின் வனம், வார் சிலை வனம், திண் தோளின் வனம், என்று இவை துவன்றி, நிருதப் பேர் ஆளின் வனம் நின்றதனை, அம்பின் வனம் என்னும் கோளின் வன வன் குழுவினின், குறைபடுத்தான். |
வாளின் வனம் - வாட்படைகளின் தொகுதியும்; வேலின் வனம் - வேற்பைடையின் தொகுதியும்; வார் சிலை வனம் - விற்படைகளின் தொகுதியும்; திண் தோளின் வனம் - வலிய தோள்களின் தொகுதியும்; என்று இவை துவன்றி - ஆகிய இவை போதும் நெருங்கப் பெற்று; நிருதப் பேர் ஆளின் வனம் நின்றதனை - அரக்க வீரர்களின் பெரிய தொகுதி எதிர் நின்றதை; அம்பின் வனம் என்னும் - (இராமன்) தன் அம்புகளின் தொகுதியென்று சொல்லக் கூடிய; கோளின் வன வன் குழுவினின் - கொலைத் தொழிலையுடைய அழகான வலிய கூட்டத்தால்; குறை படுத்தான் - துணித்து வீழ்த்தினான். வாள் முதலிய படைக்கலங்களோடு எதிர் நின்ற அரக்கர்களின் தொகுதியை இராமபிரான் தன்னுடைய அம்புகளால் துணித்திட்டான் என்பது. வனம் - அடர்ந்த வலிய தொகுதி : (மிகுதி) பெரு மழையால் வனங்கள் அழிதல் போல அழிந்தன என்பது குறிப்பு. 166 | 3041. | தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம்தான் மீன் உருவும்; மேருவை விரைந்து உருவும்; மேல் ஆம் வான் உருவும்; மண் உருவும்; 'வாள் உருவி வந்தார் |
|