| மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள்? |
திரு ஆன நிலமகளை - அழகிய பூ தேவியை; அரவு ஆகிச் சுமத்தியால் - ஆதிசேடன் எனும் பாம்பாகித் தாங்கிநிற்கிறாய்; அயில் எயிற்றின் ஏந்துதியால் - (வராக அவதாரத்தில்) கூரிய உன்பல்லில் தாங்கியுள்ளாய்; ஒரு வாயில் விழுங்குதியால் - (ஊழிக்காலத்தில் அப்பூமியை)ஒரே வாயில் முழுதும் விழுங்குகின்றாய்; ஓர் அடியால் ஒளித்தியால் - திரிவிக்கிரமனாகி ஒரு திருவடிக்குள் மறைத்துள்ளாய்; மரு ஆரும் துழாய் அலங்கல் மணிமார்பில் வைகுவாள் - மணம் நிறைந்த திருத்துழாய் மாலை உடைய நின் அழகிய மார்பில்தங்கியுள்ள திருமகள்; இஃது அறிந்தால் சீறாளோ? - இச் செய்திகளை அறிந்தால்உன்மேல் ஊடல் (பெருங் கோபம்) கொள்ளமாட்டாளா? (கொள்வள்) திருமால் அரவானது புராணமரபு. 'நாகர்களிடை நான் அனந்தன்' என்பது பகவத் கீதை (10 .29). மணிமார்பு - நீலமணி போல் ஒளிவீசும் மார்பு எனலுமாம். தலைவன் பிற பெண்பால் சேரின்தலைவி சீறுவது அகப்பொருளில் விரித்துரைக்கப் பெறும். சுமத்தியால், ஏந்துதியால், விழுங்குதியால், ஒளித்தியால் என நான்கு 'ஆல்'களும் அசைகள். 57 2574. | 'மெய்யைத் தான் சிறிது உணர்ந்து, நீ விதித்த மன்னுயிர்கள் உய்யத்தான் ஆகாதோ? உனக்கு என்ன குறை உண்டோ? வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர்; ஐயா! |
ஐயா! - தலைவனே!; நீ விதித்த மன்னுயிர்கள் - நீ படைத்த நிலை பெற்ற உயிர்கள்; மெய்யைத்தான்சிறிது உணர்ந்து - நீயே பரம்பொருள் என்ற உண்மையை ஒரளவு தெரிந்து; உய்யத் தான்ஆகாதோ - நற்கதி அடைவது என்பது தான் முடியாதோ?; உனக்கு என்ன குறை உண்டோ - (அவ்வாறு அவை உய்தி பெற்றால்) அதனால் உனக்கு எக்குறை ஏற்படும்?; மழுவாளிக்கு அன்றளித்தஐயத்தால் - கோடரிப் படையைக் கொண்ட சிவனுக்கு முன்னர் இட்ட பிச்சையால்; வையத்தார் வானத்தார் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் - மானிடரும் தேவரும்பரம்பொருள் யார் என்று எண்ணிய சிறிது சந்தேகத்தையும் நீக்கினவர்களும் உண்டு. |