| எடுத்து வாங்கி, வலம் கொண்டு, இடக் கையில் பிடித்த போது, நெறி பிழைத்தோர்க்கு எலாம் துடித்தவால், இடக் கண்ணொடு தோளுமே. |
கொடுத்த வில்லை - (வருணன் கொடுத்த அந்த வில்லை; அக் கொண்டல் நிறத்தினான் - நீர் கொண்ட மேகம் போன்ற கரிய நிறத்தையுடைய இராமபிரான்; எடுத்து - கையில் ஏந்தி; வலம் கொண்டு வாங்கி - வலிமையால் வளைத்து; இடக் கையில் பிடித்த போது - இடக் கையால் பிடித்த பொழுது; நெறி பிழைத்தோர்க்கு எலாம் - தரும நெறியிலிருந்து தவறிய அரக்கர் எல்லோர்க்கும்; இடக் கண்ணொடு தோளும் துடித்த - இடக் கண்ணும் இடத்தோளும் துடித்தன; ஆல். ஏ : அசைகள். வாங்குதல் - வளைத்தல். ஆடவர்க்கு இடக்கண்ணும் தோளும் துடித்தல் தீய நிமித்தம். கொண்டல் - தொழிலாகு பெயர். 179 இராமனும் கரனும் எதிர்ரெதிர் பொருதல் 3054. | ஏற்றி நாண், இமையாமுன் எடுத்து, அது, கூற்றினாரும் குனிக்க, குனித்து, எதிர் ஆற்றினான்அவன் ஆழிஅம் தேர், சரம் நூற்றினால், நுண் பொடிபட, நூறினான். |
(இவ்வாறு) இமையாமுன் - கண் இமைக்கும் நேரத்திலே; அது எடுத்து - அந்த வில்லையேந்தி; கூற்றினாரும் குனிக்க - யமனும் கண்டு அஞ்சும்படி; குனித்து - வளைத்து; நாண் ஏற்றி - நாணையிழுத்துப் பூட்டி; சரம் நூற்றினால் - நூறு அம்புகளால்; எதிர் ஆற்றினான் அவன் - எதிரே வந்து போர் செய்தவனான அந்த அரக்கனுடைய; ஆழி அம் தேர்- வலிய சக்கரம் பூண்ட அழகிய தேரை; நுண் பொடிபட நூறினான் - நுண்ணிய பொடியாகுமாறு அழித்தான். எதிர்த்த கரனது தேரை இராமபிரான் நூறு அம்புகளால் அழித்தான் என்பது. கூற்றினாரும் குனித்தது - அதுகாறும் இராவணனது ஆணைக்கு அஞ்சி அரக்கரிடம் அணுகாதிருந்து, இப்பொழுது இராமனின் துணை வலியால் இனி அவ்வரக்கர்களைப் பற்றலாம் என்றமையால். 180 |