பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 371

மலைகளைப் போன்ற தோள்களின் இடத்து; கிடந்த பேர் ஆசை - (தான்
கொண்ட) மிக்க ஆசை; மனம் கவற்ற - மனத்தை வருத்துதலால்;
ஆற்றாள் ஆகி - (அத்துன்பத்தைப்) பொறுத்துக் கொள்ளாதவளாய்;
திரைப் பரவைப் பேர் அகழி - அலை கடலையே பெரிய அகழியாகக்
கொண்ட, திண் நகரில் - வலிமை வாய்ந்த இலங்கை நகருக்குள்; கடிது
ஓடி -
விரைந்தோடி வந்து; 'சீதை தன்மை உரைப்பென்' என -
சீதையின் அழகுச் சிறப்பை (இராவணனுக்குக்) கூறுவேன் என்று
எண்ணியவளாய்; சூர்ப்பணகை வர - சூர்ப்பணகை வந்த போது;
இருந்தான் இருந்த பரிசு - அங்கிருந்த இராவணன் (அரசவையில்)
வீற்றிருந்த கோலத்தை; உரைத்தும் - சொல்லுகின்றோம். (மன் ஓ -
அசைகள்).

     இராமன் அழகில் கொண்ட காமத்தால் எண்ணற்ற வீரர்களின்
மரணத்தையும் மறந்தாள் இராமனை அடைவதற்குச் சீதையே தடையெனக்
கருதி அவளைக் குறித்துத் தமையனிடம் பேச அவள் மறக்கவில்லை என்ற
குறிப்பை உணர்த்துகின்றார். நில அரண், மலை அரண். காட்டரண் என்ற
வரிசையில் நீர் அரண் இயற்கையாகவே அமைந்திருந்ததைத் திரைப்
பரவைப் பேரகழி' என்பதனால் சுட்டினார்.

     முதன் முதல் இராவணன் அறிமுகமாகும் இடமாகையால் பின்னர்
ஏற்படவிருக்கும் வீழ்ச்சிக்கு முரணாக நகரின் திண்மையும், இராவணன்
மாட்சி மிக்க வீற்றிருப்பும் சொல்லத் தொடங்குகின்றார்.               1

3068. நிலை இலா உலகினிடை நிற்பனவும்
     நடப்பனவும் நெறியின் ஈந்த
மலரின்மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது,
     நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்
உலைவு இலா வகை இழைத்த தருமம் என,
     நினைந்த எலாம் உதவும் தச்சன்
புலன் எலாம் தெரிப்பது, ஒரு புனை மணி
     மண்டபம் அதனில் பொலிய மன்னோ,

    நிலை இலா - நிலையற்றதான; உலகினிடை - உலகத்தில்;
நிற்பனவும் - (இடம் பெயராது) நிலை நிற்கும் இயல்புடைய தாவரப்
பொருள்களையும்; நடப்பனவும் - (இடம் பெயரும் இயல்பினவான)
சங்கமப் பொருள்களையும்; நெறியின் ஈந்த - முறையாகப் படைத்த;
மலரின் மேல் நான்முகற்கும் - (திருமாலின்) உந்திக் கமலத்தின்
மேலமர்ந்த பிரமனுக்கும்; வகுப்பு அரிது - படைத்தற்கு அரியதாகவும்;
நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல் - நுட்பமாக அறிகிற ஒப்பற்றதும்
அளவற்றதுமாகிய வல்லமையால்; உலைவு இலா வகை இழைத்த -
(தமக்கும் பிறர்க்கும்) தீமை தராத வகையில் செய்யப் பெற்ற; தருமம் என
-
அறத்தினைப் போன்று; நினைந்த எலாம் உதவும் - நினைத்த
அனைத்தையும் நினைத்தபடியே உண்டாக்கித் தரவல்ல; தச்சன் - தெய்வத்