முதலானவர்களுடைய; நாயகர் நளிர்மணி மகுடம் - தலைவர்களின் பெருமைக்குரிய மணிகள் பதித்த கிரீடங்கள்; நண்ணலால் - (அவர்கள் வணங்கும் போதெல்லாம்) வந்து தன் மேற்படுதலால்; தேய்வு உறத் தேய்வுற - தேய்வினை அடையுந்தோறும், பெயர்ந்து - புதிய ஒளியை மீண்டும் பெற்று; அடிநின்று ஆர்ப்ப - (தன்) பாதங்களில் பொருந்தி ஒலிக்கவும்.... (ஏ - அசை) இது முதல் ஆறு கவிகள் பல்வகைத் தேவரும் இராவணன் அவையில் பணிந்து நிற்றலைக் கூறுகின்றன. 6 3073. | மூவகை உலகினும் முதல்வர் முந்தையோர், ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல்போல், தேவரும் அவுணரும் முதலினோர், திசை தூவிய நறு மலர்க் குப்பை துன்னவே. |
மூவகை உலகினும் - மூன்று உலகங்களிலும்; முதல்வர் - தலைவர்களாக உள்ளவர்கள்; முந்தையோர் - முற்பட்டு வந்தவர்களாய்; ஓவலர் உதவிய - ஓய்வின்றிக் கொண்டு வந்து தந்த; பரிசின் ஓங்கல் போல் - காணிக்கைகளின் குவியல் போல; தேவரும் அவுணரும் முதலினோர் - தேவர், அசுரர் முதலியவர்கள்; திசை தூவிய - அனைத்துத் திசைகளிலிருந்தும் சொரிந்த; நறுமலர்க் குப்பை - மணமலர்க் குவியல்கள்; துன்ன - நிறைந்திருக்கவும்...(ஏ - அசை). இராவணன் மேற் சொரிந்த மலர் மழைக்கு அவன் முன் வைத்த பொன் மலர்க் குவியலை உவமை கூறினார். 7 3074. | இன்னபோது இவ் வழி நோக்கும் என்பதை உன்னலர், கரதலம் சுமந்த உச்சியர், மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள் துன்னினர், முறை முறை துறையில் சுற்றவே, |
மின் அவிர் மணி முடி - மின்னலென ஒளி விரிக்கும் மணிகள் பொருந்திய மகுடம் சூடிய; விஞ்சை வேந்தர்கள் - வித்தியாதர மன்னர்கள்; இன்ன போது இவ் வழி நோக்கும் என்பதை - இன்ன நேரம் இந்தப் பக்கம் |