பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 377

பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் - மிகுந்த பயம் செறிந்த
உள்ளத்தவர்களாய்; பணி என்னை கொல் என - கட்டளை யாதோ
என்று; கின்னரர் - கின்னர வேந்தர்; இறைஞ்சுகின்றனர் - வணங்கி
நிற்கவும்....

     கின்னரர் - கின்னரம் என்னும் இசைக் கருவி வாசிக்கும் தேவ
இனத்தவர்.                                                  10

3077.பிரகர நெடுந் திசைப்
     பெருந் தண்டு ஏந்திய
கரதலத்து அண்ணலைக்
     கண்ணின் நோக்கிய
நரகினர் ஆம் என,
     நடுங்கும் நாவினர்,
உரகர்கள், தம் மனம்
     உலைந்து சூழவே.

    பிரகர - (பாவியரைத்) தண்டனை புரியும்; நெடுந்திசை - (தெற்குப்)
பெருந்திசைக்குரிய; பெருந்தண்டு ஏந்திய கரதலத்து - பெரிய கால
தண்டம் ஏந்திய கரம் படைத்த; அண்ணலை - தலைவனாம் யமனை;
கண்ணின் நோக்கிய - கண்ணெதிரே கண்ட; நரகினர் ஆம் என -
நரகவாசிகள் போல; உரகர்கள் - நாகராசர்கள்; தம் மனம் உலைந்து -
தம் உள்ளம் சோர்ந்து; நடுங்கும் நாவினர் - (இராவணைக் கண்டு) வாய்
குழறியவர்களாய்; சூழவே - சூழ்ந்து நிற்கவும்....(ஏ - அசை).

     ப்ரஹரம் - அடித்தல் எனும் பொருள் உடைய வட சொல். இராவணனின் கொடுமை உணர்த்த எமன்என்றார்.                  11

3078. திசை உறு கரிகளைச்
     செற்று, தேவனும்
வசையுறக் கயிலையை மறித்து,
     வான் எலாம்
அசைவுறப் புரந்தரன்
     அடர்த்த தோள்களின்
இசையினைத் தும்புரு
     இசையின் ஏத்தவே.

    திசை உறு கரிகளை - எட்டுத் திக்குகளிலும் உள்ள யானைகளை
(திக்கயங்களை); செற்று - வென்று; தேவனும் வசையுற - சிவபெருமானும்
பழியேற்கும்படி; கயிலையை மறித்து - மேரு மலையைப் பெயர்த்து;
வானெலாம் அசைவுற - விண்ணுலகம் நடுங்க; புரந்தரன் அடர்த்த -
இந்திரனை நெருங்கிப் போரிட்ட; தோள்களின் - (இருபது) தோள்களினது;