கலந்து; மேகம் என் துருத்தி கொண்டு - முகில்களாகிற வீசு குழலில் எடுத்துக் கொண்டு; மகர வேலைக் காவலன் - சுறா மீன்கள் நிரம்பிய கடலுக்குத் தலைவனாகிய வருணன்; நவ்வித் தோகையர் துகிலில் தோயும்- (இராவணன் அவையிலுள்ள) மானும் மயிலும் போன்ற மகளிரது ஆடைகளில் படியும்; என்பது ஓர் துணுக்கத்தோடும் - என்னும் ஓர் அச்சத்தோடு; சீகரம் சிந்த - சிறு துளிகளாகச் சிதறவும்........(மன்; ஓ - அசைகள்). தரு, நாகம் என்பன மரங்கள்; இங்கு முதலாகு பெயர்களாய் மலர்களைச் சுட்டின. அவைக்களத்திலுள்ள மகளிர் ஆடையை நனைத்துவிடுமோ என்று அஞ்சினான். இப்பாடல் முதல் ஆறு கவிகள் நீர்க் கடவுள் முதலியோர் நீர் தெளித்தல் முதலிய பணிவிடைகள் செய்தலைக் கூறும்.14 3081. | நறை மலர்த் தாதும் தேனும், நளிர் நெடு மகுட கோடி முறை முறை அறையச் சிந்தி முரிந்து உகும் மணியும் முத்தும் தறையிடை உகாதமுன்னம் தாங்கினன் தழுவி வாங்கி, துறைதொறும் தொடர்ந்து நின்று, சமீரணன் துடைப்ப மன்னோ, |
நறைமலர் - நறுமண மலர்களினின்றும் (சிந்துகிற); தாதும் தேனும் - மகரந்தமும், தேனும்; நளிர் நெடு மகுட கோடி - ('அவையினைச் சார்ந்து வந்த அரசர்களின்) பெரிய உயர்ந்த கிரீடத் தொகுதிகள்; முறை முறை அறைய - (நெரிசலால்) ஒன்றோடொன்று உராய்ந்து கொள்ளுதலால்; முரிந்து சிந்தி உகும் - சேத முற்று சிந்திச் சிதறும்; மணியும் முத்தும் - மாணிக்கங்களும் முத்துக்களும்; தறையிடை உகாத முன்னம் - தரையில் விழும் முன்னரே; சமீரணன் - வாயுவாகிய காற்றுக் கடவுள்; தழுவித் தாங்கினன் வாங்கி - ஆங்காங்கு சென்று ஏந்தியெடுத்து; துறை தொறும் தொடர்ந்து நின்று - (மண்டபத்தின்) ஒவ்வோர் இடத்திலும் விடாது சென்று நின்று; துடைப்ப - அவ்விடங்களை மாசுபடாமல் தூய்மை செய்யவும்..... (மன்; ஓ - அசைகள்). இராவணன் அவையில் குப்பையாக விழுவன மலர் மகரந்தமும் மணிகளுமே ஆகும் எனவும், அவையும் உடனுக்குடன் தூய்மை செய்யப்பட்டன எனவும் கூறப்பட்டன.15 கலிவிருத்தம் 3082. | மின்னுடை வேத்திரக் கையர், மெய் புகத் |
|