பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 381

 வியன் கருப்பூரம் மென்
     பஞ்சின் மீக்கொளீஇ,
கயங்களில் மரை மலர்க்
     காடு பூத்தென,
வயங்கு எரிக் கடவுளும்,
     விளக்கம் மாட்டவே.

    வயங்கு எரிக் கடவுளும் - விளங்குகின்ற அக்கினி தேவனும்; நயம்
கிளர் நானநெய் அளாவி -
நலம் மிக்க நறுமண நெய்யை (அகலில்)
சொரிந்து; வியன் கருப்பூரம் - சிறந்த கற்பூரத்தை; மென் பஞ்சின்
மீக்கொளீஇ -
மெல்லிய பஞ்சுத் திரியின் மேல் வைத்துப் பற்றும் படி
செய்து; கயங்களில் - குளங்களில்; மரைமலர்க் காடு பூத்தென - சிவந்த
தாமரைப் பூக்கள் பூத்தாற் போல; நந்தலில் விளக்கம் மாட்ட -
அணைதலில்லாத விளக்குகளை ஏற்றவும்....(ஏ - அசை).

     இராவணனுக்கு அங்கியங் கடவுள் விளக்கேற்றும் பணி செய்தமை
கூறப்பட்டது.18

3085. அதிசயம் அளிப்பதற்கு
     அருள் அறிந்து, நல்
புதிது அலர் கற்பகத்
     தருவும், பொய் இலாக்
கதிர் நெடு மணிகளும்,
     கறவை ஆன்களும்,
நிதிகளும், முறை முறை
     நின்று, நீட்டவே,

    நல் புதிது அலர் கற்பகத் தருவும் - சிறந்த புத்தம் புது
மலர்களைக் கொண்ட கற்பக மரங்களும்; பொய் இலாக் கதிர் நெடு
மணிகளும் -
தவறுதல் இல்லாத ஒளி உமிழும் பெரிய (சிந்தாமணி
போன்ற) தேவரத்தினங்களும்; கறவை ஆன்களும் - பால் சுரக்கும்
(காமதேனு போன்ற) பசுக்களும்; நிதிகளும் - தேவருலகில் உள்ள
(சங்கநிதி பதுமநிதி போன்ற) பெரு நிதிக் குவியல்களும்; அதிசயம்
அளிப்பதற்கு -
(இராவணனுக்கு) வியப்பை அளிக்கும் முறையில்; அருள்
அறிந்து - (அவன்) அன்பு காட்டும் நேரமறிந்து; முறை முறை நின்று
நீட்ட -
வரிசை வரிசையாய் நின்று தம் பரிசுகளை வழங்கவும் .. (ஏ -
அசை).

     இராவணன் அருள் காட்டுவார்க்கு இத்தேவர் உலகச் செல்வங்கள்
அவ்வப்போது பரிசுகள் பொழிந்தன எனவும் கூறலாம். கற்பகத் தரு -
சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம், அரிசந்தனம் என ஜந்து;
தேவமணிகள் - சிந்தாமணி, சூளாமணி; பசுக்கள் காமதேனுவும் அதன்