கடையுகக் கடல் ஒலி காட்ட - யுக முடிவில் எழும் கடலின் ஆரவாரம் செய்து; காந்துவாள் - மனம் எரிகின்றவளும்; குடதிசைக் செக்கரின் சேந்த கூந்தலாள் - மேற்குத் திசையிற் காணப்படும் அந்திச் செவ்வானம் போல் சிவந்த கூந்தலை உடையவளுமாய்; வடதிசை வாயிலின் வந்து தோன்றினாள் - வடக்குப் பக்கத்து அரண்மனை வாசலில் வந்து சேர்ந்தாள். இலங்கைக்கு வடக்கிலுள்ள தண்டக வனத்தில் சின்னா பின்னப்பட்டுச் சூர்ப்பணகை வருதலால் வடதிசை வாயிலில் புகுந்து வருதல் கூறினார்.25 | 3092. | தோன்றலும், தொல் நகர் அரக்கர் தோகையர் ஏன்று எதிர், வயிறு அலைத்து, இரங்கி ஏங்கினார்; மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள், தான் தனியவள் வர, தரிக்க வல்லரோ? |
தோன்றலும் - (இவ்வாறு சூர்ப்பணகை) வந்து காட்சி தந்ததும்; தொல் நகர் அரக்கர் தோகையர் - பழமையான இலங்கை நகரின் அசுர குலப் பெண்கள்; ஏன்று - எதிர்கொண்டு; எதிர் - அவளெதிரில்; வயிறு அலைத்து - வயிற்றில் அடித்துக் கொண்டு; இரங்கி ஏங்கினார் - வருந்தி அழுதனர்; மூன்று உலகு உடையவன் தங்கை - மூவுலகங்களுக்கும் தலைவனான இராவணன் தங்கை; மூக்கு இலள் - மூக்கு இழந்தவளாய்; தான் தனியவள் வர - தான் துணையின்றி வர; தரிக்க வல்லரோ? - பொறுக்க இயல்பவராய் ஆவரோ? இது முதல் பத்தொன்பது பாடல்கள் அவள் நிலை கண்டு இலங்கை மக்கள் உற்ற துயரைக் கூறுவனவாம். இது வரை காணாத ஒன்று இலங்கையர் கோன் தங்கைக்கு நேர்தல் கண்டு அரக்கர் அதிர்ந்தனர்.26 | 3093. | பொருக்கென நோக்கினர், புகல்வது ஓர்கிலர், அரக்கரும் இரைத்தனர்; அசனி ஆம் எனக் கரத்தொடு கரங்களைப் புடைத்து, கண்களில் நெருப்பு எழ விழித்து, வாய் மடித்து, நிற்கின்றார். |
அரக்கரும் - இராக்கதர்களும்; பொருக்கென நோக்கினர் - (சூர்ப்பணகையைத்) திடீரென்று பார்த்தவர்களாய்; புகல்வது ஓர்கிலர் - |