பக்கம் எண் :

386ஆரணிய காண்டம்

இன்னது கூறுவதென அறியாது; அசனி ஆம் என இரைத்தனர் - இடி
முழக்கம் போலக் கதறி ஒலி செய்து; கரத்தொடு கரங்களைப் புடைத்து -
கைகளோடு கைகளை அறைந்து கொண்டு; கண்களில் நெருப்பு எழ
விழித்து -
கண்களில் நெருப்புப் பொறி பறக்க விழித்துப் பார்த்து; வாய்
மடித்து நிற்கின்றார் -
உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றார்கள்.    27

3094.'இந்திரன் மேலதோ? உலகம்
     ஈன்ற பேர்
அந்தணன் மேலதோ?
     ஆழி யானதோ?
சந்திர மௌலிபால்
     தங்குமே கொலோ,
அந்தரம்?' என்று நின்று
     அழல்கின்றார் சிலர்.

    சிலர் - அரக்கர் சிலர்; அந்தரம் - தீமையானது; இந்திரன்
மேலதோ -
தேவேந்திரன் மீதில் அமையுமோ?; உலகம் ஈன்ற பேர்
அந்தணன் மேலதோ -
உலகைப் படைத்த பிரமன்மீதில் அமையுமோ?;
ஆழியானதோ - சக்கரப்படை கொண்ட திருமால் மீதில் அமையுமோ?;
சந்திர மௌலிபால் தங்குமே கொலோ - சந்திரனை முடியில் தரித்த
சிவனிடத்தில் தங்கி அமையுமோ?; என்று நின்று அழல்கின்றார் - என்று
சொல்லி நின்று மனக் கொதிப்புற்றார்கள்.

     சந்திரமௌலி - வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை. ஆழியான் என்னும் சொற்கு பாற் கடலிடத்தான் என்றும்
நீலக்கடல் போலும் மேனியான் என்றும் பொருள் கூறலாம்.            28

3095.'செப்புறற்கு உரியவர்
     தெவ்வர் யார் உளர்?
முப் புறத்து உலகமும்
     அடங்க மூடிய
இப் புறத்து அண்டத்தோர்க்கு
     இயைவதுஅன்று இது;
அப்புறத்து அண்டத்தோர் ஆர்?'
     என்றார் சிலர்.

    செப்புறற்கு உரியவர் தெவ்வர் - குறித்துச் சொல்லத்தக்க பகைவர்;
யார் உளர்? - (இராவணனுக்கு) யாவர் உள்ளார்?; முப்புறத்து உலகமும்
அடங்க மூடிய -
மூவகை உலகம் முற்றிலும் உள்ளடங்கும் படி கவிந்த;
இப்புறத்து அண்டத்தோர்க்கு - இவ்வண்ட கோளத்தில் உள்ளவர்களுக்கு;