நீரினான் - கடலில் வாழலானான்; நெருப்பினான் - கையில் நெருப்பேந்திய சிவபெருமான்; பொருப்பினான் - (இவனிடம் பயந்து) கைலை மலையில் தங்கலானான்; இனி ஆர் கொல் ஆம் ஈது - இதனைச் செய்தவர் வேறு யாராக இருக்கக் கூடும்?; என அறைகின்றார் சிலர் - என்று சில அரக்கர் வினவி நின்றனர். பாற்கடலிலும், கயிலை மலையிலும் உறைகின்ற தெய்வங்களின் இயல்பை, அஞ்சி அவ்வாறு வாழ்வதாய்க் கற்பித்து உரைத்தார். 'ஆற்றல் தோற்றுப் போய்' என்பதைச் சிவனுக்கும் கூட்டுக. நெற்றியில் நெருப்புக்கண் உடையவன், நெருப்பு வடிவாய் நின்றவன் என்றும் பொருள் கூறலாம். 31 | 3098. | 'சொல்-பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ? "இற்பிறந்தார் தமக்கு இயைவ செய்திலள்; கற்பு இறந்தாள்" என, கரன்கொலாம் இவள் பொற்பு அறையாக்கினன்போல்?' என்றார் சிலர். |
சொல் பிறந்தார்க்கு - புகழ் உரைகள் கூறத்தக்க உயர் குடிப் பிறந்த பெண்களுக்கு; இது - (கற்பழியும்) இச் செயல்; துணிய ஒண்ணுமோ? - துணிந்து செய்யக் கூடியதாகுமோ?; அன்று (ஆதலால்) இற்பிறந்தார் தமக்கு - நற்குடிப் பிறந்தவர்களுக்கு; இயைவ செய்திலள் - பொருந்திய செயல் இவள் செய்திலள்; கற்பு இறந்தாள் என - கற்பு நெறி தவறினாள் என்று; இவள் பொற்பு அறை ஆக்கினன் போல் கரன் கொல் ஆம் - கரன் இப் பெண்ணின் அழகை அழியும்படி செய்தான் போலும்; என்றார் சிலர் - எனச் சில அரக்கர் எண்ணினர். இவள் ஒழுக்கக் கேடு கண்டு கரன் உறுப்பு அரிந்து தண்டித்தான் என்று சிலர் கருதினர். 32 | 3099. | 'தத்து உறு சிந்தையர், தளரும் தேவர் இப் பித்து உற வல்லரே? பிழைப்பு இல் சூழ்ச்சியார், முத் திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார், இத் திறம் புணர்த்தனர்' என்கின்றார் சிலர். |
தத்து உறு சிந்தையர் - தடுமாறும் உள்ளம் கொண்டவர்களாய்; தளரும் - சோர்ந்து போகிற; தேவர் இப் பித்துற வல்லரே - தேவர்களில் |