எவரேனும் இத்தகைய பைத்தியக்காரச் செயலைச் செய்யவும் துணிந்தனரோ?; பிழைப்பு இல் சூழ்ச்சியார் - (அவ்வாறு செய்திருப்பின்) பிழைத்து வாழும் ஆலோசனை அற்றவர்களாய்; முத்திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார் - (தாம் மட்டுமன்றி) மூவகை உலகங்களையும் அழித்தொழிக்க எண்ணியவர்களாய்; இத்திறம் புணர்த்தனர் - இவ்வாறு அழிவைத் தரும் செயல் செய்தனர் போலும்; என்கின்றார் சிலர் - எனச் சில அரக்கர் கூறலாயினர். பித்துற்றார் பேரழிவை அறியாராய் இவ்வாறு செய்திருக்கலாம் எனச் சிலர் கருதினர். 33 | 3100. | 'இனி ஒரு கற்பம் உண்டுஎன்னின் அன்றியே, வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ? பனி வரும் கானிடைப் பழிப்பு இல் நோன்புடை முனிவரர் வெகுளியின் முடிபு' என்றார் சிலர். |
இனி ஒரு கற்பம் உண்டு என்னின் அன்றியே - இனி வேறொரு ஊழிக்காலம் உண்டானால் அன்றி; வனை கழல் வயங்கு வாள் - புனைந்த வீரக் கழலையும், விளங்கும் வாளையும் உடைய; வீரர் வல்லரோ? - (இந்நாளில் வாழும்) வீரர் இச் செயல் செய்ய வல்லமை உடையவர்களோ? (இலர்); (ஆதலால்); பனி வரும் கானிடை - அச்சம் உண்டாகும் காட்டில்; பழிப்பில் நோன்புடை முனிவரர் - குற்றமற்ற தவம்செய்யும் தவசிகள் கொண்ட; வெகுளியின் முடிபு - சினத்தின் விளைவேயாகும்; என்றார் சிலர் - என்று சிலர் கூறினார்கள். கற்பம் - ஊழிக்காலம்; 34 | 3101. | கரை அரு திரு நகர்க் கருங் கண் நங்கைமார் நிரை வளைத் தளிர்க் கரம் நெரித்து நோக்கினர்; பிரை உறு பால் என, நிலையின் பின்றிய உரையினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார். |
கரை அரு திரு நகர் - கடற் கரையில் அரிதின் அமைந்த செல்வம் மிக்க இலங்கையின்; கருங்கண் நங்கைமார் - கரிய கண்கள் கொண்ட |