அரக்கர் மாதர்; நிரை வளைத் தளிர்க் கரம் - வளையல் வரிசைகள் பூண்ட தளிர்போன்ற மென் கரங்களை; நெரித்து நோக்கினர் - பிசைந்த கோலத்தில் (சூர்ப்பணகையை) உற்று நோக்கினர்; பிரை உறு பால் என - பிரை குத்திய பாலைப் போல; நிலையின் பின்றிய உரையினர் - இயல்பு குலைந்த தடுமாறிய உரையினராக; ஒருவர் முன் ஒருவர் ஓடினார் - (யாது நேருமோ என அஞ்சி) ஒருவருக்கு முன் ஒருவராக ஓடிச் சென்றனர். கரைதல் சொல்லுதல் எனக் கொண்டு கரை அரு திருநகர் : புகழை எடுத்துச் சொல்லுதலுக்கு அரிய செல்வ நகர் எனவும் கொள்ளலாம். (கரை- முதனிலைத் தொழிற் பெயராகக் கொள்ளின் இப் பொருளாம்). 35 | 3102. | முழவினில், வீணையில், முரல் நல் யாழினில், தழுவிய குழலினில், சங்கில், தாரையில், எழு குரல் இன்றியே, என்றும் இல்லது ஓர் அழு குரல் பிறந்தது, அவ் இலங்கைக்கு அன்றுஅரோ. |
அவ் இலங்கைக்கு - அந்த இலங்கை மாநகருக்குத் (தீ நிமித்தமாக) ; முழவினில் வீணையில் - மத்தளம், வீணைகளிலிருந்து; முரல் நல் யாழினில் - இசைக்கும் இனிய யாழிலிருந்து; தழுவிய குழலினில் - தன் வசமாக்கும் புல்லாங்குழலிலிருந்து; சங்கில் தாரையில் - சங்கு, எக்காளம் ஆகியவற்றிலிருந்து; எழு குரல் இன்றியே - எப்போதும் எழுகிற மங்கல ஒலி வாராது; என்றும் இல்லது ஓர் அழு குரல் - இதுவரை கேட்காத அழுகை ஓசையானது; அன்று பிறந்தது - அப்பொழுது தோன்றி ஒலித்தது; அரோ - அசை. இன்னிசை முழங்கிய நகரில் அமங்கல அழுகை ஒலி கேட்கலாயிற்று. தீ நிமித்தம் கூறியவாறு. 36 | 3103. | கள்ளுடை வள்ளமும், களித்த தும்பியும், உள்ளமும், ஒரு வழிக் கிடக்க ஓடினார்;- வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார்- தள்ளுறும் மருங்கினர், தழீஇக் கொண்டு ஏகினார். |
|