பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 393

     நெய்ந்நிலைய வேல் அரசன் - நெய் பூசி அழகு செய்யப் பெற்ற
வேலேந்திய அரசனும்; நேருநரை இல்லான் - தனக்கு எதிராக நிற்பார்
எவரும் இல்லாதவனும் (ஆகிய இராவணன்); இந்நிலை உணர்ந்த பொழுது-
(சூர்ப்பணகைக்கு உற்ற) இக் கொடிய நிலையினை அறியுங்கால்;
எந்நிலையம் என்னா - எத்தகைய மனநிலை கொள்ள நேருமோ என்று;
மைந்நிலை நெடுங்கண் - மை நிலைபெற்ற தம் பெரிய கண்களில்; மழை
வான் நிலையது ஆக -
பொழியும் கண்ணீர் மேகம் சொரியும் மழையை
நிகர்த்ததாக; பொய்ந் நிலை மருங்கினர் - பொய்யோ என்னும் இடை
படைத்த பெண்கள்; புலம்பினர், புரண்டார் - அழுது கீழே விழுந்து
புரண்டனர்.

     இடையின் மென்மையை உயர்வு நவிற்சியாகப் பொய்யான இடை
என்று மொழிந்தார். (3606 வரையிலும் உள்ளது போலவே 3107 முதல் 3128
முடியுமளவு உள்ளனவும் கலிவிருத்தங்களே எனினும் சீரின் அசைகள் வேறு
அமைப்புடையன).                                              41

3108. மனந்தலை வரும் கனவின்
     இன் சுவை மறந்தார்;
கனம் தலை வரும் குழல்
     சரிந்து, கலை சோர,
நனந் தலைய கொங்கைகள்
     ததும்பிட, நடந்தார்;-
அனந்தர் இள மங்கையர்-
     அழுங்கி அயர்கின்றார்.

    அனந்தர் இள மங்கையர் - துயில் கொண்டிருந்த இளம் பெண்கள்
சிலர்; மனம் தலை வரும் கனவின் இன்சுவை மறந்தார் -
(சூர்ப்பணகையின் அழுகை கேட்டு) மனத்தின் இடத்தே உண்டான
கனவினால் விளையும் இனிய இன்பத்தையும் மறந்து போனவர்களாய்; கனம்
தலை வரும் குழல் சரிந்து -
முகிலென அமைந்த கூந்தல்
சரிந்தவர்களாய்; கலை சோர - ஆடை கலைந்தவர்களாய்; நனந் தலைய
கொங்கைகள் ததும்பிட -
விரிந்தமைந்த மார்பகங்கள் அசைய; நடந்தார்
-
நடக்கலாயினர்; அழுங்கி அயர்கின்றார் - வருத்தம் ஓங்க
மயங்கலாயினர்.

     மனந்தலை - மனத்தலை என்பதன் மெலித்தல் விகாரம். கனம் மேகம்
என்னும் பொருளினது.                                         42

3109.'அங்கையின் அரன் கயிலை
     கொண்ட திறல் ஐயன்
தங்கை நிலை இங்கு இதுகொல்?'
     என்று, தளர்கின்றார்;