பக்கம் எண் :

40ஆரணிய காண்டம்

     எற்கு - எனக்கு, அசுரச்சாரியை இன்றிவந்தது.                  65

2582.அன்று மூலம் ஆதியாய்!
இன்றுகாறும் ஏழையேன்
நன்று தீது நாடலேன்;
தின்று தீய தேடினேன்.

    ஆதியாய்! - முதற் பொருளே!; அன்று மூலம் இன்று காறும் -
அன்று முதல் இன்று வரை; ஏழையேன் நன்றுதீது நாடலேன் -
அறிவில்லாத நான் நல்லது கெட்டதை ஆராயவில்லை; தின்று தீய
தேடினேன்-
உயிர்களைக் கொன்று உண்டு தீவினையைத் தேடிக்
கொண்டேன்.

     காம நோயால் அறிவிழந்து, உயிர்க் கொலை புரிந்து தீயவற்றைத்
தேடிக்கொண்டான்.                                           66

2583.தூண்ட நின்ற தொன்மைதான்
வேண்ட நின்ற வேத நூல்
பூண்ட நின் பொலம் கொள் தாள்
தீண்ட இன்று தேறினேன்

    தூண்ட நின்ற தொன்மை தான் - தூண்டுவதற்காக (என்னுள்)
அமைந்து நின்ற என் பழைய நல்வினைதான்; வேண்ட நின்ற வேத நூல்-
விரும்ப நின் எதிரே வந்து நின்ற வேத நூல்கள்; பூண்ட நின் பொலம்
கொள் தாள்தீண்ட -
அணிந்துள்ள உன் அழகிய திருவடி என்னைத்
தீண்ட; இன்று தேறினேன் - இப்போது என் சாபம் தீர்ந்து நல்லறிவுற்று
உய்ந்தேன்.

     நின்ற வேதம் - நிலை பெற்ற வேதமுமாம். பொலன் கொள் தாள் -
பொற் கழலணிந்த திருவடிஎனவும் உரைப்பர். தன்னை ஓதி உணர்ந்தவர்க்கு
நல்லறிவைத் தூண்டி நின்றும் பழமையாகத்தான்(மக்களால்) விரும்பி நின்றும்
விளங்கும் வேதம் என முன்னடிகட்குப் பொருள் கூறுவர்.            67

2584.திறத்தின் வந்த தீது எலாம்
அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை ஊழியாய்!
பொறுத்தி! என்று போயினான்

    ஊழியாய்! - ஊழிக்காலத்தும் அழியாது நிற்பவனே!; திறத்தின் வந்த
தீது எலாம் அறுத்த உன்னை -
என் வினை ஆற்றலுக்கு ஏற்ப வந்த
தீவினைகளை அழித்த உன்னை; ஆதனேன் - மூடனாகியநான்; ஒறுத்த
தன்மை பொறுத்தி-
பகைத்துச் செய்த தீமைகளைப் பொறுத்தருள்க; என்று
போயினான் -
என்று சொல்லி (விராதன் தன் பழைய கந்தருவ வடிவில்
தும்புரு என்றபெயருடன்) வானுலகு சென்றான்.