பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 401

     ஐயா - ஐயனே; ஓர் உலகில் வாழ்வார் - ஒரே உலகின்கண்
வாழ்கின்றவர்களாய்; இருவர் மாரர் உளரே? - இரண்டு மன்மதர்கள்
இருக்கின்றார்களா?; அவரின் வில்லதனில் வல்லார் - அவர்களைக்
காட்டிலும் வில் வலிமையில் வல்லவர்; வீரர் உளரே - (வேறு) வீரர்களும்
இருக்கின்றார்களா?; ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஆர் -
அவர்களுக்குச் சமானமாக உள்ளவர் எவரேனும் உண்டா?; ஓர் ஒருவரே
இறைவர் மூவரையும் ஒப்பார் -
அவர்களில் ஒவ்வொருவருமே
மும்மூர்த்திகளுக்கு நிகரானவர்களாய் இருப்பார்கள்.

     மும்மூர்த்திகளும் சேர்ந்தால் இவர்களில் ஒருவருக்குச் சமமாவர் என
இவர்களை உயர்த்திக் கூறினாள்.55

3122."ஆறு மனம் அஞ்சினம், அரக்கரை"
     எனச் சென்று
ஏறு நெறி அந்தணர் இயம்ப,
     "உலகு எல்லாம்
வேறும்" எனும் நுங்கள் குலம்,
     "வேரொடும் அடங்கக்
கோறும்" என, முந்தை ஒரு
சூளுறவு கொண்டார்.

ஏறு நெறி அந்தணர் - மேலான நெறியில் வாழும் முனிவர்கள்;
ஆறுமனம் அஞ்சினம் அரக்கரை - அடக்கம் மிக்க எங்கள் மனம்
அரக்கர்களைக் கண்டு அஞ்சுகிறது; எனச் சென்று இயம்ப - என்று
(அம்மானிடரிடம்) சென்று சொல்லவும் (அம்மனிதர்கள்); உலகு எல்லாம்
வேறும் எனும் -
அனைத்து உலகங்களையும் நாங்கள் வெல்வோம் என்று
கூறும்; நுங்கள் குலம் - அரக்கர்களாகிய உங்கள் வமிசத்தை; வேரொடும்
அடங்கக் கோறும் என -
வேரோடு அழித்து முடிப்போம் என்று; முந்தை
ஒரு சூளுறவு கொண்டார் -
முன்பு ஒரு சபதம் செய்துள்ளனர்.

     அகத்தியப் படலத்தில் முனிவர்க்கு அபயம் தந்த செயல்
கூறப்பட்டுள்ளது. ஆறு மனம் - வினைத் தொகை.                   56

3123.'தராவலய நேமி உழவன்,
     தயரதப் பேர்ப்
பராவ அரு நலத்து ஒருவன்,
     மைந்தர்; பழி இல்லார்;
விராவ அரு வனத்து, அவன்
     விளம்ப, உறைகின்றார்;
இராமனும் இலக்குவனும் என்பர்,
     பெயர்' என்றாள்.