பக்கம் எண் :

402ஆரணிய காண்டம்

     (அவர்கள்) தரா வலய நேமி உழவன் - பூமி முழுவதையும் தன்
ஆட்சிச் சக்கரத்தால் கட்டுப்படுத்தியவனான; தயரதப் பேர் - தயரதன்
என்னும் பெயரை உடைய; பராவரு நலத்து ஒருவன் - புகழ்ந்துரைக்க
ஒண்ணாத சிறப்புக்கள் கொண்ட ஒரு மன்னனது; மைந்தர் - மக்கள்; பழி
இல்லார் -
பழி கூறலாகாத சிறப்புடையவர்; அவன் விளம்ப - அத்
தயரதன் இட்ட கட்டளையால்; விரா வரு வனத்து உறைகின்றார் -
நெருங்குதற்கு அரிய காட்டில் வசிக்கின்றார்கள்; பெயர் இராமனும்
இலக்குவனும் என்பர் -
அவர்கள் முறையே இராமன் என்றும் இலக்குவன்
என்றும் பெயருடையார்; என்றாள் - என்று (சூர்ப்பணகை) கூறினாள்.

     இராமலக்குவர் வனம் புகுந்த வரலாறு கூறினாள்.               57

இராவணன் தன்னைத் தானே பழித்துக் கூறுதல்

3124.'மருந்து அனைய தங்கை மணி
     நாசி வடி வாளால்
அரிந்தவரும் மானிடர்; அறிந்தும்,
     உயிர் வாழ்வார்;
விருந்து அனைய வாளொடும், விழித்து,
     இறையும் வெள்காது.
இருந்தனன் இராவணன் இன்
     உயிர்கொடு, இன்னும்.

    மருந்தனைய தங்கை - அமுதம் போல் அடியவளான தங்கை
சூர்ப்பணகையின்; மணிநாசி - அழகிய மூக்கை; வடிவாளால்
அரிந்தவரும் -
கூர்வாள் கொண்டு அறுத்தெறிந்தவர்களும்; மானிடர் -
(இழிந்த) மனிதர்களே ஆவர்; அறிந்தும் உயிர் வாழ்வார் - (அங்ஙனம்)
தாக்கப்பட்டாள் என் தங்கை என அறிந்த பின்னும் உயிர்
பிழைத்திருந்தனர்; இராவணன் - இராவணனாகிய நான்; விருந்தனைய
வாளொடும் -
புதிது போலும் என் வாளொடும்; இன்னும் விழித்து -
இன்னும் விழித்துக் கொண்டு; இறையும் வெள்காது - சற்றும் வெட்கமின்றி;
இன்னுயிர் கொடு - இனிய உயிரைச் சுமந்து கொண்டு; இருந்தனன் -
இருக்கின்றேன்!

     மனிதர்கள் தீங்கிழைத்த பின்னும் அவர்களை மாய்க்காமல் இருக்கும்
தன்னையே நொந்து கொள்கிறான் இராவணன்.                      58

3125.'கொற்றம்அது முற்றி,
     வலியால் அரசு கொண்டேன்;
உற்ற பயன் மற்று இதுகொலாம்?
     முறை இறந்தே