பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 403

முற்ற, உலகத்து முதல்
     வீரர் முடி எல்லாம்
அற்ற பொழுதத்து, இது
     பொருந்தும் எனல் ஆமே?

    கொற்றம் அது முற்றி - வெற்றி மேல் வெற்றி நிறைந்து; வலியால்
அரசு கொண்டேன் -
என் ஆற்றலால் இலங்கை ஆட்சியை நிறுவிக்
கொண்டேன்; உற்ற பயன் மற்று இது கொலாம் - (இத்தகு
பெருமைக்குரிய நான்) அடைந்த பயன் இவ்வளவுதானா?; முறை
இறந்தே -
என் ஆட்சி முறை அழிந்து போக; முற்ற உலகத்து -
முழுவதுமாய் இப்பேருலகின்; முதல் வீரர் முடி எல்லாம் - தலைமை
சான்ற வீரர்களுடைய தலைகள் எல்லாம்; அற்ற பொழுதத்து - அறுபட்ட
நிலை வந்தாலும்; இது பொருந்தும் எனல் ஆமே - (ஏற்பட்டுள்ள) இழிவு
என் தகுதிக்குப் பொருந்தியதாகுமோ?

     உலகத்து வீரர்கள் தலை இழந்தாலும் தங்கை மூக்கிழந்தமை
நேராகுமோ என்பது தோன்ற உரைத்தான்.                        59

3126.'மூளும் உளது ஆய பழி
     என்வயின் முடித்தோர்
ஆளும் உளதாம்; அவரது ஆர்
    உயிரும் உண்டாம்;
வாளும் உளது; ஓத விடம்
     உண்டவன் வழங்கும்
நாளும் உள; தோளும் உள;
     நானும் உளென் அன்றோ?

    மூளும் உளதாய பழி - உருவாகி வந்திருக்கும் அவமானத்தை; என்
வயின் முடித்தோர் -
என்பால் இழைத்த; ஆளும் உளதாம் -
மானிடர்கள் இன்னும் இருந்தனர்; அவரது ஆர் உயிரும் உண்டாம் -
அவர்களின் இனிய உயிரும் இன்னும் அழிக்கப்படாமல் இருந்தது; வாளும்
உளது -
(என் கை) வாளும் வறிதே இருந்தது; ஓதவிடம் உண்டவன் -
கடலில் பிறந்த நஞ்சினை உண்ட சிவபெருமான்; வழங்கும் நாளும் உள -
அளித்த என் ஆயுட் காலமும் இருந்தது; தோளும் உள நானும் உளென்
அன்றோ? -
(பயனின்றி) என் தோள்களும் உள்ளன, நானும் (செயலின்றி)
இருந்தேன் அல்லவா?

     வாளும், தோளும் பிறவுமாம் வல்லமை பெற்றிருந்தும் பழிக்கு
ஆளானேன் என்ற தன்னிரக்கம் புலப்படுத்தப்படுகிறது.               60

3127.'பொத்துற உடற்பழி
     புகுந்தது" என நாணி,