மூன்றே நாழிகையில்; ஏறினர் விண்ணில் என்றாள் - இறந்து விண்ணுலகடைந்தனர் எனக் கூறினாள். இராமன் வில்லாற்றல் விளங்க, சென்றவர் மூன்றே நாழிகையில் மடிந்தார் என விரைவு தோன்றக் கூறினாள். இந்த நிலையிலும் கூட இராமன் அழகிலும் வீரத்திலும் சூர்ப்பணகை கொண்ட கவர்ச்சி தெளிவாக விளங்குகிறது. 64 | 3131. | தாருடைத் தானையோடும் தம்பியர், தமியன் செய்த போரிடை, மடிந்தார் என்ற உரை செவி புகாதமுன்னம், காரிடை உருமின், மாரி கனலொடு பிறக்குமாபோல் நீரொடு நெருப்புக் கான்ற, நிரை நெடுங் கண்கள் எல்லாம். |
தமியன் செய்த போரிடை - இராமன் ஒருவனாகவே செய்த போரில்; தாருடைத் தானையோடும் தம்பியர் - மாலைகள் சூடிய வீரர்களோடு கரன் முதலிய தம்பிமார்கள்; மடிந்தார் - மரணமுற்றார்; என்ற உரை - என்னும் மொழி; செவி புகாத முன்னம் - தன் காதில் விழு முன்னர்; காரிடை மாரி - மேகங்களில் பிறந்த மழை; உருமின் கனலொடு - இடி மின்னல் நெருப்புக்களோடு; பிறக்குமா போல் - தோன்றினாற் போல; நிறை நெடுங் கண்கள் எல்லாம் - நிறைந்த பெரிய கண்கள் எல்லாவற்றிலும்; நீரொடு நெருப்புக் கான்ற - கண்ணீரும் கனலும் வீசின. சோகத்தால் கண்ணீரும், கோபத்தால் நெருப்பும் பிறந்தமைக்கு மழையும் இடி மின்னல்களும் பிறந்த மேகத்தை உவமையாக்கினார். 65 இராவணன் வினாவும் சூர்ப்பணகை விளக்கமும் | 3132. | ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி, தீயிடை உகுத்த நெய்யின், சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய, 'நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல், நின்னை, இன்னே, வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய?' என்றான். |
ஆயிடை - அவ்வமயம்; எழுந்த சீற்றத்து - உண்டாகிய கோபத்தில்; அழுந்திய துன்பம் மாறி - அனுபவித்த துயரம் நீங்கி; தீயிடை உகுத்த |