பக்கம் எண் :

410ஆரணிய காண்டம்

இழுதைச் சொல் - என்று சொல்லப்படும் இச் செய்தி பொய்ச்
செய்தியாகும்; (உண்மை யாதெனில்); இவ் வாசம் நாறு ஓதியானை - இந்த
மணம் கமழும் கூந்தலுடைய சீதையை; கண்டனன் - கண்டு (மோகமுற்று) ;
வவ்வல் ஆற்றான் - கவர்ந்து செல்ல இயலாதவனாகி; பேசல் ஆம்
தகைமைத்து அல்லா -
வெளியே சொல்லவும் முடியாத; பெரும் பிணி
பிணிப்ப -
காமப் பெரு நோய் பற்றிக் கொள்ள; நீண்ட ஆசையால் -
மிகுதியான ஆசையினாலே; அவ் வுருவம் அழிந்து தேய்ந்தான் -
அழகிய மேனி மெலிவுற்று அழிந்தான்; அம்மா - வியப்பு!

     உண்மையாக மன்மதன் உருவிலியான காரணம் ஒன்றாக இருக்க
மற்றொன்றைக் காரணமாக்குதல் ஒழிப்பு அணி. சீதையைக் கவரும் ஆற்றல்
மன்மதனுக்கு இல்லை என்று சொல்லி, அதனைச் செய்யுமாறு இராவணனை
மறைமுகமாகத் தூண்டுகிறாள்.                                    71

3138.'தெவ் உலகத்தும் காண்டி;
     சிரத்தினில் பணத்தினோர்கள்
அவ் உலகத்தும் காண்டி; அலை
     கடல் உலகில் காண்டி;
வெவ் உலை உற்ற வேலை, வாளினை,
     வென்ற கண்ணாள்
எவ் உலகத்தாள்? அங்கம்
     யாவர்க்கும் எழுத ஒணாதால்!

    வெவ் உலை உற்ற வேலை, வாளினை - வெப்பம் மிகுந்த
கொல்லர் உலையில் உருவாக்கப்பட்ட வேல், வாள் முதலியவற்றைக்
(கூர்மையால்); வென்ற கண்ணாள் - வெற்றி கொண்ட கண்களை
உடையவள் (சீதை) ; எவ்வுலகத்தாள்? - எந்த உலகைச் சார்ந்தவளோ
(அறியேன்); அங்கம் யாவர்க்கும் எழுத ஒணாதால் - சித்திரத்தில் கூட
யாராலும் இத்தகைய அழகு வடிவம் தீட்ட முடியாத சிறப்புடையாள்; தெவ்
உலகத்தும் காண்டி -
(இவளைப் போன்ற அழகுடையார் உண்டா என்று)
பகைவர் உலகங்களிலும் தேடிக் காண்பாயாக; சிரத்தினில்
பணத்தினோர்கள் அவ்வுலகத்தும் காண்டி -
தலைகளில் படமேந்திய
நாகர் உலகத்தும் தேடிக் காண்பாயாக; அலை கடல் உலகில் காண்டி -
கடல் சூழ்ந்த பூவுலகிலும் தேடிக் காண்பாயாக. (எங்கும் இவளை
ஒப்பாரைக் காணமாட்டாய்)

     இராவணன் ஆணை செல்ல வல்ல எவ்வுலகத்தும் இவளை நிகர்த்த
அழகுடையார் இல்லை என்பதாம்.                                72

3139.'தோளையே சொல்லுகேனோ? சுடர்
     முகத்து உலவுகின்ற