பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 411

வாளையே சொல்லுகேனோ?
     அல்லவை வழுத்துகேனோ?
மீளவும் திகைப்பதல்லால், தனித்தனி
     விளம்பல் ஆற்றேன்;
நாளையே காண்டி அன்றே? நான்
     உனக்கு உரைப்பது என்னோ?

    தோளையே சொல்லுகேனோ? - (அவளுடைய) தோளின் அழகை
எடுத்துக் கூறுவேனோ?; சுடர் முகத்து உலவுகின்ற வாளையே
சொல்லுகேனோ? -
ஒளி வீசும் முகத்தில் திரிகின்ற வாளை மீன் போன்ற
கண்ணழகை எடுத்துக் கூறுவேனோ?; அல்லவை வழுத்துகேனோ? -
அல்லாது பிற உறுப்புக்களை எடுத்துக் கூறுவேனோ?; மீளவும் திகைப்பது
அல்லால் -
மறுபடியும் திகைத்துப் போகின்றேனே அன்றி; தனித் தனி
விளம்பல் ஆற்றேன் -
ஒவ்வோர் உறுப்பழகையும் தனியே வருணிக்க
வலிமை இல்லேன்; நான் உனக்கு உரைப்பது என்னோ? - நான் உனக்கு
விவரித்துச் சொல்ல வேண்டுவது யாதுமில்லை; நாளையே காண்டி
அன்றே -
நாளைக்கு நீயே காணப் போகின்றாய் அல்லவா?

     இவ்வாறு கூறுவதன் மூலம் சீதையைக் காணும் ஆவலை இராவணன்
உள்ளத்தே மூட்டுகின்றாள்.                                     73

3140.'வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல்
     ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும்,
     பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;
     சொல்லல் ஆம் உவமை உண்டோ?
"நெல் ஒக்கும் புல்" என்றாலும்,
     நேர் உரைத்து ஆகவற்றோ!

    வில் ஒக்கும் நுதல் என்றாலும் - வில்லைப் போல் நெற்றி
அமைந்திருக்கிறது என்று சொன்னாலும்; விழி வேல் ஒக்கும் என்றாலும்-
கண்கள் வேல் போல் விளங்குகின்றன என்று சொன்னாலும்; பல் முத்து
ஒக்கும் என்றாலும் -
பற்கள் முத்துக்கள் போன்றிருக்கும் என்று
சொன்னாலும்; பவளத்தை இதழ் என்றாலும் - பவளமே இவள் இதழ்கள்
என்று சொன்னாலும்; சொல் ஒக்கும் - உவமிக்கப்படும் சொல் பொருத்தம்
ஆகலாம்; (அல்லாது); பொருள் ஒவ்வாதால் - (சீதையின் உறுப்பழகை
உணர்த்தும் முழுமையான) பொருளால் பொருந்தாது; சொல்லல் ஆம்
உவமை உண்டோ -
(எனவே) சொல்லத்தக்க உவமை வேறு ஏதேனும்
உளதாகுமோ? (இல்லை) ; புல் ஒக்கும் நெல் - புல்லைப் போன்றிருக்கும்