2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் சரபங்க முனிவர் இராமன் திருவருளால் மானிடப் பிறவி நீங்கி வீடு பேறெய்திய நிகழ்ச்சியைக்கூறும் சிறிய பிரிவு இது. சரபங்கன் என்ற பெயர் மன்மதன் எய்தும் காம பாணங்களைத்தோல்வியுறச் செய்தவன் என்ற பொருள் கொண்டது. காமத்தை வென்றவன் என்ற பொருளில் 'மீன்வரு கொடியவன் விறல் அடும் மறவோன்' (2625)என இப்படலத்தில் குறிப்பிடப் பெறுவான். மேலும் வெகுளி மயக்கம் ஆகியவற்றையும் ஒழித்தவன்என்பதும் இதனால் உணரப் பெறும். விராதனின் சாபம் தீர்ந்தபின் இராமன் முதலியோர் சரபங்கனின் ஆசிரமம் நோக்கிச்சென்றனர். வழியில் பிரமனின் ஆணையால் சரபங்கனைச் சத்தியலோகம் அழைத்துச் செல்லவந்திருந்த இந்திரன் இராமனைத் துதித்துச் சென்றான். பின்னர் இராமன் சரபங்க முனிவனிடம்சேர்ந்தான். இராமனின் சேவைக்காக எதிர்நோக்கி இருந்த அம்முனிவன் அவனைப் பணிந்து அவன் எதிரில் தீப்புகுந்து வானுலகடைந்தான். சரபங்கனுடைய குடில் அடைதல் கலி விருத்தம் 2587. | குரவம், குவி கோங்கு, அலர் கொம்பினொடும் இரவு, அங்கண், உகும் பொழுது எய்தினரால்- சரவங்கன் இருந்து தவம் கருதும் மரவம் கிளர், கோங்கு ஒளிர், வாச வனம் |
குரவம் குவிகோங்கு அலர் - குரா மலரும் குவிந்த கோங்கு அரும்புகளும் மலர்ந்த - கொம்பினொடும் - பூங் கொம்புபோன்ற சீதையுடன்; சரவங்கன் இருந்து தவம் கருதும் - சரபங்க முனிவன் தங்கியிருந்துதவத்தைச் செய்கின்ற; மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம்- மராமரத்திலிருந்துவளர்ந்தோங்கும் தேன் விளங்கு மணங்கொண்ட |