அழுங்குவானும் ஆயினான் - வருந்துகின்றவனும் ஆனான். பழி பாவங்களைக் காமத்தால் இராவணன் மறந்து போனான்.92 3159. | பரம் கிடந்த மாதிரம்பரித்த, பாழி யானையின் கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன்- மரம் குடைந்த தும்பிபோல, அனங்கன் வாளி வந்து வந்து உரம் குடைந்து, நொந்து நொந்து, உளைந்து உளைந்து-ஒடுங்கினான். |
பரம் கிடந்த மாதிரம் பரித்த - பாரம் தாங்கும் திசைகளைச் சுமந்த; பாழி யானையின் - வலிமை மிக்க திக்கு யானைகளுடைய; கரம் கிடந்த கொம்பு ஒடிந்து - தும்பிக்கையோடு பொருந்திய கொம்புகள் முறிய; அடங்க வென்ற காவலன் - முழுவதாக வெற்றி கொண்ட இராவணன்; மரம் குடைந்த தும்பி போல் - மரத்தைக் குடைகிற வண்டு போல்; அனங்கன் வாளி வந்து வந்து - மன்மதனின் அம்பு தொடர்ந்து வந்து; உரம் குடைந்து - (தன்) மார்பை ஊடுருவ; நொந்து நொந்து - மிகவும் வருத்தமுற்று; உளைந்து உளைந்து - மிகவும் அயர்ச்சியுற்று; ஒடுங்கினான் - மெலிவுற்றான். வலிய திக்கு யானைகளையும் வெல்லும் திறமுடையோன்மென்மையான மலர்க் கணைகளுக்குத் தோற்றான் என முரண் காட்டிக்கூறினார். துன்ப மிகுதி காட்ட, வந்து வந்து, நொந்து நொந்து, உளைந்துஉளைந்து என அடுக்கி உரைத்தார். அடங்க - முற்றிலும்;93 3160. | 'கொன்றை துன்று கோதையோடு ஓர் கொம்பு வந்து என் நெஞ்சிடை நின்றது, உண்டு கண்டது' என்று, அழிந்து அழுங்கும் நீர்மையான், மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல, மல்லிகைத் தென்றல் வந்து எதிர்ந்த போது, சீறுவானும் ஆயினான். |
'கொன்றை துன்று கோதையோடு - கொன்றைக் காயை ஒத்த கூந்தலுடனே; ஓர் கொம்பு வந்து - ஒரு பூங்கொம்பு போன்றாள் வந்து; என் நெஞ்சிடை நின்றது - எனது மனத்திற்குள் தங்கினாள்; கண்டது உண்டு - (அவளை) நான் பார்த்ததுண்டு'; என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் - |