பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 425

ஆணிப் பொன் வேங்கை;
     கோங்கம், அரவிந்தராகம்; பூகம்
சேண் உய்க்கும் நீலம்; சாலம்
     குருவிந்தம்; தெங்கு வெள்ளி;
பாணித் தண் பளிங்கு, நாகம்;
     பாடலம் பவளம் மன்னோ.

    (அச் சோலையில்); பனசம் மாணிக்கம் - பலா மரங்கள் மாணிக்க
மயமாகவும்; வாழை மரகதம் - வாழை மரங்கள் மரகத மயமாகவும்; தேமா
வயிரம் -
இனிய மாமரங்கள் வைர மயமாகவும்; வேங்கை ஆணிப்
பொன் -
வேங்கை மரங்கள் உயர்வகைப் பொன் மயமாகவும்; கோங்கம்
அரவிந்த ராகம் -
கோங்கு மரங்கள் பதும ராகம் என்னும் இரத்தின
மயமாகவும்; பூகம் சேண் உய்க்கும் நீலம் - கமுகு நெடுந்தொலைவு
ஒளிரும் நீலமணி மயமாகவும்; சாலம் குருவிந்தம் - ஆச்சா மரங்கள்
குருவிந்தம் என்னும் மணி மயமாகவும்; தெங்கு வெள்ளி - தென்னை
மரங்கள் வெள்ளி மயமாகவும்; நாகம் பாணித் தண் பளிங்கு - சுர
புன்னை மரங்கள் நீரோட்டம் மிக்க கண்ணாடி மயமாகவும்; பாடலம்
பவளம் -
பாதிரி மரங்கள் பவள மயமாகவும் (இருந்தன). (மன்னோ -
அசை)

     இராவணனின் சோலை மரங்கள் தங்கம், மணிகள் மயமானவை என்று
சுந்தரகாண்டச் செய்யுள் (4853) விளக்குகிறது. வினை முற்று வருவித்து
முடிக்கப்பட்டது.                                               96

3163.வான் உற நிவந்த செங் கேழ் மணி
     மரம் துவன்றி, வான
மீனொடு மலர்கள் தம்மின்
     வேற்றுமை தெரிதல் தேற்றா,
தேன் உகு, சோலைநாப் பண், செம்பொன்
     மண்டபத்துள், ஆங்கு ஓர்
பால் நிற அமளி சேர்ந்தான்; பையுள்
     உற்று உயங்கி நைவான்.

    வானுற நிவந்த செங் கேழ் - விண் தொடுமாறு உயர்ந்த அழகிய
ஒளியுடைய; மணி மரம் - இரத்தின மயமான மரங்கள்; துவன்றி -
நெருங்கி வளர்ந்து; வான மீனொடு மலர்கள் தம்மின் - விண்
மீன்களுக்கும் மரங்களின் மலர்களுக்கும் இடையே; வேற்றுமை தெரிதல்
தேற்றா -
வேறுபாடு தெரிய முடியாதபடி (அமைந்திருக்கும்); தேன் உகு
சோலை நாப்பண் -
தேன் சிந்தும் சோலையின் நடுவே; செம்பொன்
மண்டபத்துள் -
தங்கமயமான மண்டபத்தில்; ஆங்கு ஓர் - அங்கே
இடப்பட்ட ஒரு; பால் நிற அமளி சேரந்தான் - பால் போன்ற வெள்ளை
நிறப் படுக்கையினை அடைந்த (இராவணன்); பையுள் உற்று - துயரம்
வந்தடைய; உயங்கி நைவான் - நொந்து வருந்தினான்.

     முதல் இரண்டடியில் உவமை அணி அமைந்துள்ளது.97