பக்கம் எண் :

432ஆரணிய காண்டம்

     முன்பு இராவணனிடம் அஞ்சி ஏவல் செய்த சந்திரன், அவன் மீது
பழி தீர்க்க வந்தான் போல் உதயம் செய்தான். இப்பாடலில் தற்குறிப்பேற்ற
அணி அமைந்துள்ளது.                                         107

3174. பராவ அருங் கதிர்கள் எங்கும் பரப்பி,
     மீப் படர்ந்து, வானில்
தராதலத்து, எவரும் பேணா,
     அவனையே சலிக்கும் நீரால்,
அரா-அணைத் துயிலும் அண்ணல், காலம்
     ஓர்ந்து, அற்றம் நோக்கி,
இராவணன் உயிர்மேல் உய்த்த திகிரியும்,
     என்னல் ஆன.

    பராவ அருங் கதிர்கள் - போற்றுதற்கரிய (சிறப்புமிக்க)
(அச்சந்திரனின்) கிரணங்களை; எங்கும் பரப்பி - எத்திசையிலும் பரவ
விட்டுக் கொண்டு; மீப் படர்ந்து - மேற் சென்று; வானில் - விண்ணுலகில்;
தராதலத்து - மண்ணுலகில்; எவரும் பேணா அவனையே - எவராலும்
நேசிக்கப்படாத இராவணனையே; சலிக்கும் நீரால் - துன்புறுத்தும்
தன்மையினால்; அரா அணைத் துயிலும் அண்ணல் - ஆதிசேடனாகிய
பாம்புப் படுக்கையில் உறங்கும் திருமால்; காலம் ஓர்ந்து - சமயம் பார்த்து;
அற்றம் நோக்கி - அவன் (இராவணன்) அழிவைக் கருதி; இராவணன்
உயிர்மேல் உய்த்த -
அவ்விராவணன் உயிர் மீது ஏவிய; திகிரியும்
என்னல் ஆன -
சக்கரப்படை என்று சொல்லும்படியாகவும் விளங்கின.

     கடலினின்றும் பொங்கிய நிலா, பாற்கடல் துயிலும் பரமன் ஏவிய
சக்கரமாகக் கற்பித்தல் தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.              108

3175.அருகுறு பாலின் வேலை அமுது
     எலாம் அளைந்து வாரிப்
பருகின, பரந்து பாய்ந்த நிலாச் சுடர்ப்
     பனி மென் கற்றை,
நெரியுறு புருவச் செங் கண் அரக்கற்கு,
     நெருப்பின் நாப்பண்
உருகிய வெள்ளி அள்ளி வீசினால்
     ஒத்தது அன்றே.

    அருகு உறு பாலின் வேலை - பக்கத்தில் அமைந்துள்ள பாற்
கடலினின்றும்; அமுதெலாம் அளைந்து வாரி - அமுதம் முழுவதையும்
வாரி யெடுத்து; பருகின பரந்து பாய்ந்த நிலாச் சுடர் - குடித்து எங்கும்
விரிந்து பரவிய சந்திரனின் ஒளியான; பனி மென் கற்றை - மெல்லிய
குளிர்ந்த கிரணங்கள்; நெரியுறு புருவச் செங்கண் அரக்கற்கு - இப்போது
நெரிந்த