கருங்கழல் காலன் - பெரிய வீரக் கழலை அணிந்த இயமனும்; அஞ்சும் காவலன் - அஞ்சுகின்ற பெருமை படைத்த இராவணன் - கறுத்து நோக்கி - (தன் பணியாளரைச்) சினந்து நோக்கி; சீதம் தரும் கதிர் - குளிர்ச்சியைத் தரும் கிரணங்கள் கொண்ட; யாக்கைச் சந்திரன் - மேனி படைத்த சந்திரனை; தருதிர் என்ன - அழைத்து வாருங்கள் என்று (யான்) கூற; முருங்கிய கனலின் - அழிக்கும் கொடு நெருப்பையும்; மூரி விடத்தினை - வலிமை மிக்க நஞ்சினையும்; முருக்கும் சீற்றத்து - கடும் கோபத்தையும்; அருங்கதிர் அருக்கன் தன்னை - (கொண்ட) வெப்பக் கிரணங்களையும் கொண்ட சூரியனை; 'ஆர் அழைத்தீர்கள்' என்றான் - அழைத்து வந்தது யார் என்று கேட்டான். குளிர் நிலவைக் கடுங்கதிராய் உணர்ந்தான். 111 3178. | அவ் வழி, சிலதர் அஞ்சி, 'ஆதியாய்! அருள் இல்லாரை இவ் வழித் தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால்; செவ் வழிக் கதிரோன் என்றும் தேரின்மேல் அன்றி வாரான்; வெவ் வழித்து எனினும், திங்கள், விமானத்தின் மேலது' என்றார். |
அவ்வழிச் சிலதர் அஞ்சி - இராவணன் இவ்வாறு வினவிய போது பணியாளர் அச்சம் கொண்டு; ஆதியாய் - முதல்வனே; அருள் இல்லாரை- உன்னால் அருளப்பட்டாரையன்றிப் பிறரை; இவ் வழித் தருதும் என்பது- இங்கு யாம் அழைத்து வருதல் என்பது; இயம்பலாம் இயல்பிற்று அன்று - பேசத் தக்க தன்மையது அன்று; செவ்வழிக் கதிரோன் - சிவந்த கிரணங்கள் உடைய சூரியன்; என்றும் தேரின் மேல் அன்றி வாரான் - எப்போதும் தேர் மீதன்றி வரமாட்டான்; வெவ்வழித்து எனினும் - (உனக்கு) வெப்பம் தருவதாய் இருப்பினும்; திங்கள் - சந்திரன்; விமானத்தின் மேலது என்றார் - விமானத்தின் மீதில் உள்ளான் என்றனர்; ஆல் - அசை. கதிரவனும் திங்களும் பயணம் செய்யும் முறைமை எடுத்துக் காட்டினார். 112 இராவணன் நிலாவைப் பழித்தல் 3179. | பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காமக் குணம்தான் முன்னம் அறியாதான் கொதியாநின்றான்; மதியாலே, |
|