| தண் அம் தாமரையின் தனிப் பகைஞன் என்னும் தன்மை, ஒருதானே உணர்ந்தான்; உணர்வுற்று, அவன்மேல் இட்டு, உயிர்தந்து உய்க்க உரைசெய்வான்; |
பணம் - பாம்பின் படம்; தாழ் - தோற்கும்படியான; அல்குல் - அல்குலையும்; பனி மொழியார்க்கு - குளிர்ச்சி பொருந்திய பேச்சையும் உடைய பெண்களிடம்; அன்புபட்டார் - ஆசை கொண்டார்; படும் - அடைகின்ற; காமக் குணம் - காதல் நோயின் தன்மையை; தான் முன்னம் அறியாதான் - முன் எப்போதும் துய்த்தறியாத இராவணன்; மதியாலே கொதியா நின்றான் - சந்திரனால் துன்பம் கொண்டவனாகி; தண் அம் தாமரையின் - குளிர்ந்த அழகிய தாமரைக்கு; தனிப் பகைஞன் என்னும் தன்மை - (இந்தச் சந்திரனே) நேரான எதிரி என்னும் உண்மையை; ஒரு தானே உணர்ந்தான் - தனக்குத் தானே உணர்ந்து கொண்டான்; உணர்வுற்று - இவ்வுண்மை உணர்வு வந்து எய்தியதும்; அவன் மேல் இட்டு - அச் சந்திரன் மேல் வைத்து; உயிர் தந்து உய்க்க - தன் உயிரை அளித்துக் காக்குமாறு; உரை செய்வான் - கூறத் தொடங்கினான். இதுகாறும் தான் விரும்பிய மகளிரை அடைதலல்லாது நினைந்து வருந்தும் அனுபவம் இராவணனுக்கு ஏற்படவில்லை என்பதாம். 113 3180. | 'தேயாநின்றாய்; மெய் வெளுத்தாய்; உள்ளம் கறுத்தாய்; நிலை திரிந்து காயா நின்றாய்; ஒரு நீயும், கண்டார் சொல்லக் கேட்டாயோ? பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால் ஓயாநின்றேன்; உயிர் காத்தற்கு உரியார் யாவர்?-உடுபதியே! |
உடுபதியே - விண்மீன்களின் தலைவனே!; தேயா நின்றாய் - (நீ, உன்) உடல் தேயப் பெற்றாய்; மெய் வெளுத்தாய் - மேனி வெண்ணிறமுற்றாய்; உள்ளம் கறுத்தாய் - உள்ளிடத்தே கறுத்தும் விளங்குகின்றாய்; நிலை திரிந்து காயா நின்றாய் - குளிர்ச்சி நிலை மாறி வெப்பமும் தருகின்றாய்; ஒரு நீயும் - உயர்ந்தவனாகிய நீயும்; கண்டார் சொல்லக் கேட்டாயோ - (என்னைப் போன்றே) சீதையின் அழகைக் கண்டவர்கள் வருணிக்கக் கேட்டனையோ? பாயா நின்ற மலர் வாளி - (என் உடல் மீது) பாய்கின்ற மன்மதனின் மலர்க் கணைகள்; பறியா நின்றார் இன்மையால் - பறித்து என்னைப் பாதுகாப்பார் இல்லாமையினால்; ஓயா நின்றேன் - தளர்வுற்று நின்றேன்; உயிர் காத்தற்கு - |