கலவி முற்றியவராய்; பணைகளைத் தழுவிய - பருத்த மரங்களைப் பின்னிய; பவளவல்லி போல் - பவளக் கொடிகளைப் போல; இன் உயிர்த் துணைவரை - இனிய உயிரனைய கணவர்களை; இணை மலர்க் கைகளின் - மலர் போன்ற இரண்டு கரங்களாலும்; இறுகத் தழுவினர் - அழுத்தமாக அணைத்தவாறு; துயில்கின்றார் - உறங்கினர். உயிர்த் துணைவர் - உவமத் தொகை (உயிர் போன்ற துணைவர்). ஆடவரின் திண்மைக்கு மரங்களும், பெண்டிரின் எழிலுக்கும் மென்மைக்கும் பவளக் கொடிகளும் பொருந்திய உவமைகளாயின. 121 3188. | அளிஇனம் கடம்தொறும் ஆர்ப்ப, ஆய் கதிர் ஒளி பட உணர்ந்தில, உறங்குகின்றன; தெளிவுஇல இன் துயில் விளையும் சேக்கையுள் களிகளை நிகர்த்தன, களி நல் யானையே. |
அளி இனம் - வண்டுகளின் கூட்டம்; கடம் தொறும் ஆர்ப்ப - கன்னங்களில் பொழியும் மதநீரில் மொய்த்து ஆரவாரிக்கவும்; ஆய் கதிர் ஒளிபட - வெளிச்சத்தால் சிறந்த சூரிய ஒளி பாயவும்; உணர்ந்தில உறங்குகின்றன - விழிப்புறாமல் உறங்குகின்றனவான; களி நல் யானை - மதங்கொண்ட உயர்ந்த யானைகள்; இன்துயில் விளையும் சேக்கையுள் - இனிய உறக்கம் தரும் படுக்கையில்; தெளிவு இல - தூக்கம் தெளியாமல் உறங்கும்; களிகளை நிகர்த்தன - கட்குடியர்களைப் போல விளங்கின; ஏ- ஈற்றசை. திடீரென விடிந்தமையின் விளைவாய் யானைகளும்துயிலெழாதிருந்தன. களி(ப்பு)கள் உண்பதால் வரும் போதை.கட்குடியர்களை உயர்திணையாகக் கருதுதலும் பொருந்தாது என்பார் போல்களிகள் என அஃறிணையில் சுட்டினார். 122 3189. | விரிந்து உறை துறைதொறும் விளக்கம் யாவையும், எரிந்து இழுது அஃகல, ஒளி இழந்தன- அருந் துறை நிரம்பிய உயிரின் அன்பரைப் பிரிந்து உறைதரும் குலப் பேதைமாரினே. |
|