பக்கம் எண் :

442ஆரணிய காண்டம்

     இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும் - (அந்நகரத்தில்)
விருப்பம் போல் தூங்குவோர் அனைவருடைய கண்களும்; பகலும் தம்
இமைகள் நீக்கல -
பகல் வந்த பின்னும் இமை விரியாதிருந்தன; நிச்சயம்-
இது சத்தியம்; (இக்கண்கள்); 'பிச்சையும் இடுதும் - கேட்போருக்குப்
பிச்சை இடுவோம்; என்று உணர்வு பேணலா - என்னும் எண்ணம்
இல்லாத; வச்சையர் - உலோபிகளின்; நெடுமனை வாயில்மான -
உயர்ந்த இல்லங்களின் வாசற்கதவு போன்றிருந்தன. (அடைந்திருந்தன); ஏ -
ஈற்றசை.

     நெடுமனை வாயில் என்பதால் மனையின் வளம் தெரிகிறது. வளம்
இருந்தாலும் பிச்சையேனும் இடுவோம் என்று நினையும் மனம் இல்லை.
பெரிய கண்கள், பொழுதும் விடிந்தது; காண்பன காணும் எண்ணம் இல்லை.
வாயிலைத் திறந்தால் எவரேனும் வந்து விடுவரோ என்று கருதி அடைத்த
வாசல் என்பது குறிப்பு. உவமையணி, விருந்தினரையும் தக்கோரையும் தேடி
வழங்கும் வள்ளன்மைதான் இல்லை; தேடி வரும் இரவலர்க்குப்
பிச்சையேனும் இடலாமே என்ற எண்ணம் இல்லை என்பதைப் பிச்சையும்
என்ற இழிவு சிறப்பும்மை புலப்படுத்திற்று.                        125

3192. நஞ்சு உறு பிரிவின,
     நாளின் நீளம் ஓர்
தஞ்சு உற விடுவது ஓர்
     தயாவு தாங்கலால்,
வெஞ் சிறை நீங்கிய
     வினையினார் என,
நெஞ்சு உறக் களித்தன-
     நேமிப்புள் எலாம்.

    நாளின் நீளம் - பகல் நேரம் நீளுதலால்; ஓர் தஞ்சு உற - அதுவே
தஞ்சமாக அமைய; நஞ்சுறு பிரிவின - கொடிய விடம் போலும் பிரிவுத்
துன்பத்தினைப் பெற்றனவாய் விளங்கிய; நேமிப்புள் எலாம் - சக்கரவாகப்
பறவைகளெல்லாம்; விடுவது ஓர் தயாவு தாங்கலால் - அத்துன்பம்
நீங்கும் பகற் பொழுதின் கருணையினால்; வெஞ்சிறை நீங்கிய -
பிறவியாகிய கொடிய சிறையினின்றும் விடுபட்ட; வினையினார் என - நல்
வினையாளர் போல; நெஞ்சு உறக் களித்தன - மனம் நிறைந்து
மகிழ்ந்தன.

     இரவில் பிரிவுத் துன்பமுறும் சக்கரவாகப் புட்கள் பகலில் கூடி
மகிழ்ந்தன. பிரிவு நஞ்சென உவமிக்கப் பெற்றது. நீளம் - கூடு எனவும்
பொருள் கொள்ளலாம். தயாவு : தயா, தயவு, கருணை.              126

3193. நாள்மதிக்கு அல்லது,
     நடுவண் எய்திய
ஆணையின் திறக்கலா
     அலரில் பாய்வன,