| மாண் வினைப் பயன்படா மாந்தர் வாயில் சேர் பாணரின் தளர்ந்தன- பாடல்-தும்பியே. |
நாள் மதிக்கு அல்லது - ஒவ்வொரு நாளும் உதிக்கும் நிலாவுக்கு அன்றி; நடுவண் எய்திய ஆணையின் - இடையில் வந்து சேரும் (பகலவனின்) கட்டளைக்கு; திறக்கலா - மலராத; அலரில் பாய்வன - குவளை போன்ற மலர்களில் பாய்வனவான; பாடல் தும்பி - இசை பாடும் வண்டுகள் (அவை குவிந்துள்ள நிலையில்); மாண்வினைப் பயன்படா - மாட்சி மிக்க கலைத் தொழிலைப் பயன் கொள்ளாத; மாந்தர் வாயில் சேர்- மனிதர்களின் வீட்டு வாசலை அடைந்து; பாணரின் தளர்ந்தன - (பயன்பெறாத) பாணர்களைப் போல் சோர்வுற்றன; ஏ - ஈற்றசை. பகற் பொழுதில் குவிந்த மலர்களில் பாய்ந்த வண்டுகள் கலைநயமுணராதார் முன் சென்ற பாணர் போன்று சோர்வுற்றன. 127 3194. | அரு மணிச் சாளரம் அதனினூடு புக்கு எரி கதிர் இன் துயில் எழுப்ப எய்தவும், மருளொடு தெருளுறும் நிலையர், மங்கையர்- தெருளுற மெய்ப் பொருள் தெரிந்திலாரினே. |
அரு மணிச் சாளரம் - அரிய மாணிக்கங்கள் பதித்த சன்னலில்; அதனின் ஊடு புக்கு - அங்கே உட்புகுந்து வந்து; எரிகதிர் - வெப்பம் மிக்க சூரியன்; இன்துயில் எழுப்ப எய்தவும் - தங்கள் இனிய உறக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வந்து சேர்ந்த பின்னும்; மங்கையர் - அரக்கர் குலப் பெண்கள்; தெருள் உற மெய்ப் பொருள் தெரிந்திலாரின் - தெளிவு தரும்படி உயர்ந்த உண்மைப் பொருளை அறியாத பேதையர் போன்று; மருளொடு - மயக்கமும்; தெருளுறும் நிலையர் - தெளிவும் கலந்த குழப்ப நிலையினராக விளங்கினர்; ஏ - ஈற்றசை. இரவு சென்றதை நம்பமுடியாத நிலையால் ஏற்பட்ட குழப்பம், ஞானமில்லாதார் உலக வாழ்வின் உண்மையறியாத குழப்பத்தோடு ஒப்பிடப்படுகின்றது. 128 3195. | ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர், |
|