பக்கம் எண் :

444ஆரணிய காண்டம்

நாவலர் இயற்றிய நாழி
     நாம நூல்
காவலின் நுனித்து உணர்
    கணிக மாக்களும்,
கூவுறு கோழியும்,
     துயில்வு கொண்டவே.

    நாவலர் இயற்றிய - புலமை நலம் சான்றோர் உருவாக்கிய; நாழி
நாம நூல் -
காலக் கணிதமான சோதிட நூல்களை; காவலின் நுனித்து
உணர் கணித மாக்களும் -
பாதுகாத்து ஆராய்ந்து உணர்ந்த சோதிட
வல்லுநர்களும்; கூவுறு கோழியும் - விடியலைக் கூவி உணர்த்தும்
சேவல்களும்; ஏவலின் வன்மையை - (இரவை விலக்கிப் பகலை வரச்
சொன்ன) இராவணனின் ஆணையின் வல்லமையை; எண்ணல் தேற்றலர் -
உணரும் ஆற்றல் இல்லாதவராய்; துயில்வு கொண்ட - உறக்கத்தில்
ஆழ்ந்திருந்தனர். (ஏ - அசை).

     இராவணன் ஆணையின் கடுமையால் காலக் கணிதமும் தோற்றது.
இயற்கையை உணர்ந்த சேவல்களும் தோற்றன.

     எழுவாய்க்கு ஏற்றபடி அஃறிணை முடிவு உயர்திணையாகப் பொருள்
முடிவு பெற்றது.                                              129

3196. இனையன உலகினில்
     நிகழும் எல்லையில்,
கனை கழல் அரக்கனும்,
     கண்ணின் நோக்கினான்;
'நினைவுறு மனத்தையும்
     நெருப்பின் தீய்க்குமால்;
அனைய அத் திங்களே
     ஆகுமால்' என்றான்.

    இனையன - இத்தகைய நிகழ்ச்சிகள்; உலகினில் நிகழும்
எல்லையில் -
உலகெங்கும் நடைபெற்ற பொழுதில்; கனை கழல்
அரக்கனும் -
ஒலிக்கும் வீரக்கழல் புனைந்த இராவணனும்; கண்ணின்
நோக்கினான் -
கண்களால் சூரியனைக் கண்டு; நினைவுறு மனத்தையும்-
எண்ணும் இதயத்தையும்; நெருப்பின் தீய்க்குமால் - இச் சூரியன் தீயாய்ச்
சுட்டெரிக்கின்றான்; ஆதலால்; அனைய அத்திங்களே ஆகும் - இவனும்
அச் சந்திரன் போன்றே இருக்கிறான்'; என்றான் - என்று மொழிந்தான்.
(ஆல் - அசை).                                            130

3197.'திங்களோ அன்று இது;
     செல்வ! செங் கதிர்