பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 447

ஏந்திய ஆதிசேடனின்; விடவாள் எயிறு - நஞ்சு தோய்ந்த கூரிய பல்
ஆகும்; அன்று எனின் - இல்லையெனில்; மாலை - மாலைப் பொழுது;
என்னை வெகுண்டு - என் மீது சினம் கொண்டு; அட - கொல்லுதற்காக;
வாள் உருவிக் கொடு - வாளை உருவிக் கொண்டு; தோன்றியது ஆகும்-
எதிரில் காட்சி தருவது ஆகும்; அன்றோ - அல்லவோ (என்றான்).

     வடவைத் தீ கடலின் நடுவில் பெண் குதிரை முகத்தில் தோன்றுவது;
பிரளய கால நெருப்பு என்றும் கூறுவர்.                           134

3201.'தாது உண் சடிலத் தலை வைத்தது-
     தண் தரங்கம்
மோதும் கடலிற்கிடை
     முந்து பிறந்தபோதே,
ஓதும் கடுவைத் தன் மிடற்றில்
     ஒளித்த தக்கோன்,
"ஈதும் கடு ஆம்", என எண்ணிய
     எண்ணம் அன்றே?

    தண் தரங்கம் - குளிர்ந்த அலைகள்; மோதும் கடலிற்கிடை -
வீசும் திருப்பாற் கடலிடையே இருந்து; முந்து பிறந்த போதே - முன்பு
உதித்த காலத்தில்; ஓதும் கடுவை - கொடிதாய் உரைக்கப்படும் ஆலகால
நஞ்சை; தன் மிடற்றில் ஒளித்த தக்கோன் - தன் கழுத்தில் மறைத்த
சிவபெருமான்; தாது உண் சடிலம் - (கொன்றைப் பூவின்) மகரந்தம்
மலிந்த சடை முடி சூழ்ந்த; தலை வைத்தது - தலைமீது பிறையை
வைத்துக் கொண்டது; ஈதும் கடு ஆம் என - இதுவும் விடம் ஆகும்
என்று; எண்ணிய எண்ணம் அன்றே - கருதிய கருத்தினால் அல்லவா?

     இப்பாடலின் கருத்து தற்குறிப்பேற்ற அணி.                  135

3202.'உரும் ஒத்த வலத்து உயிர்
     நுங்கிய திங்கள், ஓடித்
திருமு இச் சிறு மின் பிறை,
     தீமை குறைந்தது இல்லை-
கருமைக் கறை நெஞ்சினில்
     நஞ்சு கலந்த பாம்பின்
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி
     குறைந்தது உண்டோ?'

    உரும் ஒத்த வலத்து - இடியேறு போல் வலிமையோடு; உயிர்
நுங்கிய திங்கள் -
என் உயிரை உண்ட முழு நிலவு; ஓடித் திருமு -
சென்று