பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 453

கண்டேன்; இவர் போல்வது
     ஓர் பெண் உருக் கண்டிலேனால்;
உண்டே எனின், வேறு இனி,
    எங்கை உணர்த்தி நின்ற
வண்டு ஏறு கோதை மடவாள்
     இவள் ஆகும் அன்றே.

    பண்டு ஏய் உலகு ஏழினும் - முன்னமே ஏழு உலகங்களிலும்;
உள்ள படைக்கணாரைக் கண்டேன் - இருக்கும் மகளிரைப்
பார்த்துள்ளேன்; இவர் போல்வதோர் பெண் உருக் கண்டிலேன் -
அவர்களிடையே இவ் வடிவம் போல் ஓர் பெண் உருவை நான்
கண்டதில்லை; இனி வேறு உண்டே எனின் - உலகிலுள்ள
பெண்களிலிருந்து மாறுபட்டதே இவ்வுரு என்றால்; எங்கை உணர்த்தி
நின்ற -
என் தங்கை சூர்ப்பணகை குறித்துச் சொன்ன; வண்டு ஏறு
கோதை மடவாள் -
வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய இளநங்கை;
இவள் ஆகும் - இவளே ஆவாள். (அன்றே - தேற்றம்; ஆல் - அசை)

     படைக் கண்ணார் - அம்பு, வாள் போன்ற கண்களை உடைய
பெண்கள். இதுவரை காணாத அழகு என்பதால் சூர்ப்பணகை குறிப்பிட்டது
அவளேயாகும் இவள் எனக் கருதினான்.                          145

3212.'பூண்டு இப் பிணியால் உறுகின்றது,
     தான் பொறாதாள்,
தேண்டிக் கொடு வந்தனள்; செய்வது
     ஓர் மாறும் உண்டோ?
காண்டற்கு இனியாள் உருக்
     கண்டவட் கேட்கும் ஆற்றால்,
ஈண்டு, இப்பொழுதே, விரைந்து,
     எங்கையைக் கூவுக' என்றான்.

    (இவ்வாறு கருதிய இராவணன் மேலும் எண்ணலானான்) 'பூண்டு
இப்பிணியால் -
காதல் நோய் பொருந்தி அந்த நோயால்; உறுகின்றது
தான் பொறாதாள் -
(யான்) வருந்துவதை அறிந்து பொறாதவளாய்;
தேண்டிக் கொடு வந்தனள் - (சீதை) என்னைத் தேற்றும் பொருட்டுத்
தேடிக் கொண்டு வந்து விட்டாள்; செய்வது ஓர் மாறும் உண்டோ? -
யான் இவளுக்குச் செய்யத்தக்க கைம்மாறு ஏதும் உண்டா? (இல்லை);
காண்டற்கு இனியாள் - கண்டு களிக்க இனியவளான சீதையினது; உருக்
கண்டவள் -
வடிவத்தை நேரிற்கண்ட சூர்ப்பணகையை; கேட்கும்
ஆற்றால் -
வினவி உண்மை அறியும் பொருட்டு; ஈண்டு இப்பொழுதே -
இதோ இந்தக் கணமே; விரைந்து - விரைவாக;