எங்கையைக் கூவுக' என்றான் - என் தங்கையை அழையுங்கள் என்று ஆணையிட்டான். உருவெளித் தோற்றத்தைச் சீதையென மயங்கியவன் உண்மை அறியத் தங்கையை அழைத்தான். 146 3213. | என்றான் எனலும், கடிது ஏகினர் கூவும் எல்லை, வன் தாள் நிருதக் குலம் வேர்அற மாய்த்தல் செய்வாள், ஒன்றாத காமக் கனல் உள் தெறலோடும், நாசி, பொன் தாழ் குழைதன்னொடும் போக்கினள் போய்ப் புகுந்தாள். |
என்றான் எனலும் - இவ்வாறு இராவணன் கட்டளையிட்டான் என்றதும்; (பணியாளர்); கடிது ஏகினர் கூவும் எல்லை - விரைந்து சென்று (சூர்ப்பணகையை) அழைத்த பொழுதில்; வன்தாள் நிருதக் குலம் - வலிய முயற்சியை உடைய அரக்கர் மரபை; வேர் அற மாய்த்தல் செய்வாள் - ஆணி வேரோடு அழிக்கப் பிறந்த அவள்; நாசி - மூக்கையும்; பொன்தாழ் குழை தன்னொடும் - பொன்னாலாகிய குழையணிந்த செவியையும்; போக்கினள் - பறி கொடுத்தவள்; ஒன்றாத காமக் கனல் - ஒரு தலையாய்ப் பிறந்த காம நெருப்பு; உள் தெறலோடும் - மனத்தை வருத்தும் நிலையில்; போய்ப் புகுந்தாள் - அங்கு வந்து சேர்ந்தாள். சேர்ந்தாரை அழிக்கும் நெருப்புப் போன்றது காமமென்பதால் காமக்கனல் என்றார். 147 இராவணன் சூர்ப்பணகை உரையாடல் 3214. | பொய்ந் நின்ற நெஞ்சின் கொடியாள் புகுந்தாளை நோக்கி, நெய்ந் நின்ற கூர் வாளவன், 'நேர் உற நோக்கு; நங்காய்! மைந் நின்ற வாள்-கண் மயில் நின்றென வந்து, என் முன்னர் இந் நின்றவள் ஆம்கொல், இயம்பிய சீதை?' என்றான். |
நெய்ந் நின்ற கூர் வளாவன் - நறு நெய் பூசிய கூரிய வாளை உடைய இராவணன்; பொய்ந்நின்ற நெஞ்சின் - பொய் குலவும் மனம் உடைய; கொடியாள் புகுந்தாளை நோக்கி - கொடிய சூர்ப்பணகை அங்கு |