பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 459

போன்று; நீர்தரு சந்திர காந்தத்தாலே - நீர் சுரப்பதாகிய சந்திர காந்தம்
என்னும் கற்களாலே; சிறந்து ஆர் மணிமண்டபம் - சிறந்து விளங்கும்
எழில் மிகு மணி மண்டபம் ஒன்றை; செய்க என - சமைக்க வேண்டும்'
என; செப்புக என்றான் - சிற்பக் கலைஞரிடம் கூறுங்கள்" எனப்
பணித்தான்.

     சந்திரகாந்தம் - சந்திர கிரணம் பட்டதும் நீர் சொரியும் ஒரு
வகைக்கல் சந்திர காந்தக் கல்லாலாகிய கட்டடம் பற்றி முன்னும் (122)
கம்பர் குறித்திருக்கிறார். குளிர்ச்சியை நாடி இவ்வாறு கூறினான். செப்புக
என்றது தெய்வச் சிற்பியைக் கருதிக் கூறியது.                       155

3222. வந்தான் நெடு வான் உறை தச்சன்;
     மனத்து உணர்ந்தான்;
சிந்தாவினை அன்றியும், கைவினை
     யாலும் செய்தான்-
அம் தாம நெடுங் தறி ஆயிரத்
     தால் அமைந்த
சந்து ஆர் மணி மண்டபம், தாமரை
     யோனும் நாண.

    நெடுவான் உறை தச்சன் - உயர்ந்த தேவருலகத் தச்சனான
விசுவகர்மா; மனத்து உணர்ந்தான் - இராவணன் கட்டளையைத் தன்
மனதில் உணர்ந்து கொண்டவனாய்; வந்தான் - அங்கு வந்து சேர்ந்தான்;
அம் தாம நெடுந்தறி ஆயிரத்தால் - அழகிய ஒளி் மிக்க ஆயிரம்
நெடுந்தூண்களால்; அமைந்த சந்தார் மணிமண்டபம் - அமைவதான
அழகு பொலியும் சந்திர காந்த மணி மண்டபத்தை; தாமரையோனும்
நாண-
படைப்புக் கடவுளாகிய பிரமனும் வெட்கப்படும்படியாக; சிந்தா
வினைஅன்றியும் -
சிந்தித்து உருவாக்கிய தோடன்றி; கைவினையாலும்
செய்தான் -
கைவினைத் திறன் மிளிரவும் செய்து முடித்தான்.

     சந்து - அழகு நினைவினாலும் திட்டமிட்ட செயலாலும் எழில் கூட்டி
மண்டபம் அமைத்தான் விசுவகர்மா. வெற்றி பெறுதற்குத் திட்டமும்
வேண்டும்; வினை செயல் வகையும் வேண்டும். இதை இச் செய்யுள்
உணர்த்தியது.                                               156

3223.காந்தம், அமுதின் துளி
     கால்வன, கால மீனின்
வேந்தன் ஒளி அன்றியும்,
     மேலொடு கீழ் விரித்தான்;
பூந் தென்றல் புகுந்து
     உறை சாளரமும் புனைந்தான்;