பக்கம் எண் :

46ஆரணிய காண்டம்

2693.தான், இன்று அயல் நின்று
     ஒளிர் தண் கதிரோன்,
'யான் நின்றது என்?' என்று,
     ஒளி எஞ்சிட, மா
வான் நின்ற பெரும் பதம்
     வந்து, உரு ஆய்
மேல் நின்றென, நின்று
     ஒளிர் வெண் குடையான்;

    அயல் நின்று ஒளிர் தண் கதிரோன் - வெளியிடங்கள் எல்லாம்
சென்று பரவி விளங்கும் குளிர்ந்த கதிர் வீசும் சந்திரன்; இன்றுயான்
நின்றது என் என்று -
இந்நாளில் நான் இவ்வுலகில் விளங்கி நிற்பதால்
பயன் என்னஎன்று எண்ணி; ஒளி எஞ்சிட - ஒளி குறையும்படி; மா வான்
நின்ற பெரும் பதம் -
உயர்ந்த விண்ணில் பொருந்திய பெரிய சுவர்க்கம்;
உரு ஆய் வந்து - குடை வடிவாய்வந்து; மேல் நின்று என நின்று
ஒளிர் வெண்குடையான் -
தன் மேலே நின்றது எனச்சொல்லும்படி ஒளி
வீசும் வெண்கொற்றக் குடையை உடையவன் (இந்திரன்); தான் - அசை.

     சந்திரன் வெட்கப்பட்டுத் தன் ஒளி குறையுமாறு, பேரொளியுடன்
சுவர்க்கமே குடையாக வந்ததுஎன்பது தற்குறிப்பேற்ற அணி. சந்திரனினும்
வெண்மை ஒளி உடையது குடை என்பது தொடர்புயர்வுநவிற்சியணி. இனிப்
பெரும் பதம் என்பதற்குப் பெரும் சிறப்புடைய உணவாகிய தேவாமிர்தம்
என்பர் சிலர். அமிர்தத்துடன் பிறந்த சந்திரன் அந்த அமிர்தமே இந்திரனின்
குடையாகஅமைந்ததால் இனித் தான் வானில் நின்று ஒளி பரப்புவது ஏன்
என நாணித் தன் ஒளி குறைந்திடஒளிமிக்க தேவ அமுதை வெண்குடையாக
இந்திரன் பெற்றிருந்தான் என்பர். ஒளி - புகழும் ஆம்.தான் என்பது
சந்திரனைக் குறித்ததாகவும் கொள்வர்.                              7

2594.திசை கட்டிய மால் கரி
     தெட்ட மதப்
பசை கட்டின, கிட்டின
     பற்பல போர்
விசை கட்டழி தானவர் விட்டு
     அகல் பேர்
இசை கட்டிய ஒத்து
     இவர், சாமரையான்;

    திசை கட்டிய மால் கரி - எட்டுத்திக்குகளில் கட்டிய பெரிய எட்டு
யானைகளின்; தெட்ட மதப் பசை - தெளிவான மதநீர்ப்பசையோடு,
கட்டின - தொடர்புடையனவாக; கிட்டின பற்பல போர் - நெருங்கிய
பலபல போர்களில்; விசை கட்டழி தானவர்- வேகமும் உறுதியும் அழிந்து