பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 469

கருந் தட மலைஅன்னானை எதிர்கொண்டு,
     கடன்கள் யாவும்
திருந்திய செய்து, செவ்வித் திருமுகம்
     நோக்கிச் செப்பும்:

    அந்த இராவணன் எய்தலோடும் - அந்த (அரக்கர் தலைவன்)
இராவணன் சென்று சேர்ந்தவுடன்; இருந்த மாரீசன் - அங்கிருந்த மாரீசன்;
பொருந்திய பயத்தன் - அச்சம் அடைந்தவனாய்; சிந்தை பொருமுற்று -
மனம் வெதும்பி; வெருவுகின்றான் - கலக்கம் அடைந்தவனாய்; கருந்தட
மலை அன்னானை -
கரிய பெரிய மலை போன்ற இராவணனை; எதிர்
கொண்டு -
முன் சென்று வரவேற்று; கடன்கள் யாவும் திருந்திய செய்து
-
சிறப்பான முறையில் உபசரணைகள் ஆற்றி; செவ்வித் திருமுகம்
நோக்கி -
பொலிவு மிக்க இராவணன் முகம் பார்த்து; செப்பும் - பேசத்
தொடங்கினான்.

     தவநெறி மேற்கொண்டிருந்த மாரீசனுக்கு இராவணன் தனித்த வருகை
மனத்தில் அச்சத்தை மூட்டியது.                                   1

கலிநிலைத் துறை

3238.'சந்த மலர்த் தண் கற்பக
     நீழல் தலைவற்கும்,
அந்தகனுக்கும், அஞ்ச அடுக்கும்
     அரசு ஆள்வாய்!
இந்த வனத்து, என் இன்னல்
     இருக்கைக்கு, எளியோரின்
வந்த கருத்து என்? சொல்லுதி'
     என்றான்-மருள்கின்றான்.

    மருள்கின்றான் - (எதற்காக இராவணன் வந்தானோ என)
மயங்குகின்ற மாரீசன்; சந்த மலர்த்தண் - அழகிய குளிர்ந்த மலர்களை
உடைய; கற்பக நீழல் தலைவற்கும் - கற்பக மர நிழலில் அரசாளும்
இந்திரனுக்கும்; அந்தகனுக்கும் - எமனுக்கும்; அஞ்ச - அச்சம் வரும்படி;
அடுக்கும் அரசாள்வாய் - மேல் நெருங்கி அரசாட்சி புரிபவனே; இந்த
வனத்து -
இந்தக் காட்டுக்குள்; என் இன்னல் இருக்கைக்கு - என்
துன்பம் மிக்க குடியிருப்பை நாடி; எளியோரின் - யாருமற்ற எளியோரைப்
போல; வந்த கருத்து என் - நீ வந்ததன் நோக்கம் யாது?; சொல்லுதி
என்றான் -
எடுத்துரைப்பாயாக' என்று கூறினான்.

     தன் குடியிருப்பை இன்னல் இருக்கை என்றது, காட்டுக்குள் வசதி
இல்லாத தவச்சாலை என்பது பற்றி. இந்திரனையும் அந்தகனையும்
இணைத்துக் கூறியது, இராவணனின் தலைமையையும், அழிக்கும் திறனையும்
இணைத்துக் கூறியவாறாம்.                                       2