தோற்றோடிய அசுரர்களினின்று; விட்டு அகல் பேர் இசை கட்டிய ஒத்து - நீங்கிஓடும்படியாகப் புகழை நிலை நாட்டியவை போல்; இவர் சாமரையான் - மேல் எழுந்துவிளங்கும் வெண் சாமரையை உடையவன் (இந்திரன்). தெட்ட - முற்றிய என்றுமாம். எட்டுத்திசை யானைகளின் மதமாகிய பசை உடலில் பட்டுக்கட்டிப் போகும்படி அசுரர்களுடன் கிட்டின போர் எனலாம். இந்திரனுக்குத் தோற்றோடிய அசுரர்உடல் மீது திக்குயானைகளின் மதநீர் பட்டு வெண்மையாய் உறைந்து போயிற்று. சாமரைகள்வெற்றித் தூண்களுக்கு உவமிக்கப் பெற்றன. தானவர் - தனு என்பவளிடம் தோன்றிய மரபினர். 8 2595. | தேரில் திரி செங் கதிர் தங்குவது ஓர் ஊர் உற்றது எனப் பொலி ஒண் முடியான்; போர் வித்தகன்; நேமி பொறுத்தவன் மா மார்வில் திருவின் பொலி மாலையினான்; |
தேரில் திரி செங்கதிர் தங்குவது - (ஒற்றைச் சக்கரமுள்ள தன்) தேரில் ஏறிச் செல்லும் சிவந்த கதிர்களுடைய சூரியன் தங்குவதான;ஓர் ஊர் உற்றது என - ஒரு பரிவேடம் இதுவாம் எனும்படி அமைந்த; பொலி ஒண் முடியான்- விளங்கும் ஒளிமிக்க கிரீடத்தை உடையவன்; போர் வித்தகன் - போர்செய்வதில் சிறந்தவன்; நேமி பொறுத்தவன் மா மார்வில் திருவின் - சக்கரப்படைஏந்திய திருமாலின் பெருமை மிக்க மார்பில் வாழும் திருமகளைப் போல; பொலி மாலையினான்- விளங்கும் மாலை அணிந்தவன் (இந்திரன்). தேரொளிக்குப் பரி வேடமும், கிரீடத்திற்குச் சூரியனும் உவமை ஆம். நேமி பொறுத்தவன்என இந்திரனையும் குறிக்கும் என்பர். ஏன் எனில் அவனுக்குச் சக்கிரி, நேமி என்ற பெயர்கள்உள்ளன. இந்திரன் மார்பின் மாலைக்குத் திருமால் மார்பில் திருமகள் உவமை. மார்வு -மார்பு. 9 2596. | செற்றி, கதிரின் பொலி செம் மணியின் கற்றைச் சுடர் விட்டு எரி கஞ்சுகியான்; வெற்றித் திருவின் குளிர் வெண் நகைபோல் சுற்றிக் கிளரும் சுடர் தோள் வளையான்; |
|