| ஐயோ! போனான், அம்பொடும், உம்பர்க்கு அவன் என்றால், உய்வார் யாரே நம்மில் எனக் கொண்டு, உணர்தோறும், நையாநின்றேன்; நீ இது உரைத்து நலிவாயோ? |
வெய்யோர் - கொடியவர்களில்; வீர விராதன் துணை வெய்யோர்- வீரனாகிய விராதனுக்கு இணையான கொடியவர்; யாரே - யார் உளர்?; அம்பொடும் - (இராமபிரான்) அம்பினால்; ஐயோ - என்ன பரிதாபம்!; உம்பர்க்கு அவன் போனான் என்றால் - வானுலகுக்கு அவனும் கொல்லப்பட்டுச் சென்றான் எனில்; நம்மில் யாரே உய்வார் - (அவ்விராமனிடமிருந்து) நம்மவரில் யார்தான் தப்பிப் பிழைக்க முடியும்?; எனக்கொண்டு - என்று கருதி; உணர்தோறும் நையா நின்றேன் - எண்ண, எண்ண நொந்திருக்கின்றேன்; நீ இது உரைத்து நலிவாயோ? - இப்போது (இவ்வாறு என்னிடம்) மேலும் கூறி என் வருத்தத்தை மிகுதிப்படுத்துவாயோ? விராதன் வதை நமக்கு ஒரு பாடமன்றோ என மாரீசன் எடுத்துக் கூறினான். விராதனை இராமலக்குவர் வாளால் அழித்தனர். (2550) இங்கே அம்பு என்றது ஆயுதம் என்ற பொருளில் கொள்ளத்தக்கது.15 3252. | 'மாண்டார், மாண்டார்; நீ இனி மாள்வார் தொழில் செய்ய வேண்டா, வேண்டா; செய்திடின், உய்வான் விதி உண்டோ? ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன்? அறம் நோனார், ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்? எல்லாம் இலர் அன்றோ? |
மாண்டார் மாண்டார் - ஏற்கெனவே இறந்தவர்கள் இறந்து போயினர்; இனி நீ - இனிமேல் நீ; மாள்வார் தொழில் செய்ய - மரணமுறப் போகின்றவர்கள் செயத் தக்க செயலைச் செய்ய; வேண்டா வேண்டா - (அருள் கூர்ந்து) முற்பட வேண்டாம்; செய்திடின் - நீ அவ்வாறு செய்வாயானால்; உய்வான் விதி உண்டோ - தப்பிப் பிழைக்க வழியும் உண்டோ? (இல்லை); ஆண்டார் ஆண்டார் - உனக்கு முன்னே இவ்வுலகை ஆண்டு சென்றோர்; எத்தனை என்கேன் - எத்தனையென்று கணக்குரைக்க முடியாது; அறம் நோனார் - அறத்தை நோற்காதவர்; ஈண்டார் - நிலை பெற்று நின்றதில்லை; ஈண்டு ஆர் நின்றவர் - (மேலும்) இவ்வுலகில் |