பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 479

உணர்ந்தாய் - என்னும் உண்மையை நீ உணர்ந்திருக்கிறாய்; புலை
ஆடற்கு ஒன்றும் உன்னாய் -
தீயன செய்தற்குச் சிறிதும்
சிந்தியாதவனாய்; என் உரை கொள்ளாய் - என் பேச்சைக் கேட்பாயாக;
இனி ஐயா - இனிமேலேனும், தலைமைக்கு உரியாய்; உயல் செல்வத்து -
ஓங்கிய செல்வங்களோடு; என்றும் என்றும் வைகுதி - எப்போதும்
எந்நாளும் இனிதே வாழ்வாயாக; என்றான் - என (மாரீசன்)
எடுத்துரைத்தான்; ஆல் - அசை.

     'உலகில் எப்பொருளும் நிலையாமையை உணர்ந்து நன்னெறி நின்று
நலமுடன் வாழ்க' என வேண்டினான் மாரீசன். இராவணனின் அருந்தவம்,
அது தந்த பெரு வாழ்வு. அறநெறி தவறுதலால் விளையும் அழிவு, இந்திரன்
போன்றோர் காமத்தால் வீழ்ந்தமை, கரன் முதலியோரை அழித்த இராமன்
வலிமை எனப் பல நிலைகளிலும் மாரீசன் சிந்தித்து அறிவுரை கூறினான்.18

இராவணன் மாரீசனை முனிதல்

கலி விருத்தம்

3255.' "கங்கை சடை வைத்தவனொடும்
     கயிலை வெற்பு ஓர்
அங்கையின் எடுத்த எனது ஆடு
     எழில் மணித் தோள்,
இங்கு ஓர் மனிதற்கு எளிய"
     என்றனை' என, தன்
வெங் கண் எரிய, புருவம்
     மீதுற, விடைத்தான்.

    (மாரீசன் அறிவுரை கேட்ட இராவணன்), 'கங்கை சடை வைத்த
வனொடும் -
கங்கையைத் தலையின் மீது வைத்திருக்கும்
சிவபெருமானோடு; கயிலை வெற்பு - கயிலையங்கிரியை; ஓர் அங்கையின்
எடுத்த -
உள்ளங்கை ஒன்றால் எடுத்த; எனது ஆடு எழில் மணித்
தோள் -
என்னுடைய அழகு பொலியும் மாணிக்கத் தோள்கள்; இங்கு ஓர்
மனிதற்கு எளிய -
இவ்வுலக மானுடன் ஒருவனுக்கு இளைத்து விட்டன;
என்றனை என - என்று கூறிவிட்டாயே என்று; தன் வெங் கண் எரிய -
தன் கொடிய கண்களில் நெருப்புத் தவழ; புருவம் மீதுற - புருவங்கள்
சினத்தால் மேலுயர; விடைத்தான் - பெருஞ் சினம் அடைந்தான்.

     கயிலையங்கிரி எடுத்தவனுக்கு மானுடன் வலியவன் ஆவானோ
என்றான் இராவணன்.                                          19

3256.'நிகழ்ந்ததை நினைத்திலை; என்
     நெஞ்சின் நிலை, அஞ்சாது