செற்றி கதிரின் பொலி - பதிக்கப் பெற்றுக் கிரணங்களால் ஒளி வீசி நிற்கும்; செம்மணியின் சுடர்க்கற்றை - சிவந்த மாணிக்கங்களின் ஒளியின் தொகுதி;விட்டு எரி கஞ்சுகியான் - வெளி விட்டு ஒளி வீசும் மேல் அங்கி உடையான்; வெற்றித் திருவின் குளிர் வெண் நகை போல் - விசயலக்குமியின் குளிர்ந்த வெண்பற்களின்சிரிப்புப் போல்; சுற்றிக் கிளரும் சுடர்தோள் வளையான் - சுற்றி விளங்குகின்ற ஒளிவீசும் தோள் வளையங்களை உடையவன் (இந்திரன்). செற்றி - ஒளி பெறச் செதுக்கி என்பர். சிலர் தோள் வளைகளை வெண்ணகைக்குஉவமையாக்கியதால் அவ்வணி முத்துக்கள் பதித்தவை எனலாம். தோள்வளையம் - வாகுவலயம் எனும்அணி. கஞ்சுகி - கவசம் என்பாருமுளர். 10 2597. | பல் ஆயிரம் மா மணி பாடம் உறும் தொல் ஆர் அணி கால் சுடரின் தொகைதாம் எல்லாம் உடன் ஆய் எழலால், ஒரு தன் வில்லால், ஒளிர் மேகம் எனப் பொலிவான்; |
பல் ஆயிரம் மாமணி பாடம் உறும்- பல ஆயிரக்கணக்கான சிறந்த மாணிக்கங்கள் ஒளிவீசும்; தொல் ஆர் அணி கால் சுடரின்தொகை - பழமைச் சிறப்புற்ற நகைகள் வெளியிடும் ஒளியின் கூட்டம்; எல்லாம் உடன் ஆய் எழலால் - எல்லாம் ஒன்று சேர்ந்து மேலே கிளம்புதலால்; ஒரு தன் வில்லால் - இணையற்ற தன் இந்திரவில் எனும் வானவில்லால்; ஒளிர் மேகம் எனப் பொலிவான் - விளங்கும் கரு மேகம் போல விளங்குபன் (இந்திரன்). தாம் - அசை. பாடம் - ஒளி, நகைகளின் சிறப்பைப் பழமை உணர்த்தும். இந்திரனுக்கு மேகமும், அவன்பூண்ட நகைகளுக்கு இந்திர வில்லும் உவமை. இந்திரன் நிறம் கருமை. பல நிற ஒளி மணிகள் பதித்தநகைகள் வானவில்லின் பலநிறங்கள் கொண்டதற்கு ஏற்புடைத்து. 11 2598. | மானா உலகம் தனில், மன்றல் பொரும், தேன் நாறு, நலம் செறி, தொங்கலினான்; மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம் வான் நாடியர் கண் எனும் வாள் உடையான்; |
|