பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 483

சேர்த்து முழுவதிலுமாய்; கோசிகன் அளித்த கடவுட் படை -
விசுவாமித்திர முனிவனால் வழங்கப்பட்ட தெய்வ அம்புகள்; கொதிப்போடு-
பொங்கும் அனலோடு; ஓர் இமைப்பின் உயிர் தின்ப - இமைப்
பொழுதில் உயிரைப் பருகி முடிக்கும் வல்லமை உடையன; ஆசில -
குற்றம் (தோல்வி) அறியாதவை; கணிப்புஇல் - கணக்கில்லாதவை; இராமன்
அருள் நிற்ப -
இராமபிரானிடம் (ஏவல் பூண்டு) அருள் காத்து
நிற்பனவாம்.

     தாடகை வதம் முடிந்து வேள்வி காத்தபின் விசுவாமித்திரரும்,
முனிவரும் அளித்த தெய்வப் படைகள் பல இராமனிடம் பொருந்தி
உள்ளன. இது குறித்துப் பால காண்டம் வேள்விப் படலம் (394, 395, 396)
கௌசிகன் - விசுவாமித்திர முனிவர். குசிகன் குலத்தில் பிறந்தோன்.   25

3262.'வேதனை செய் காம விடம்
     மேலிட மெலிந்தாய்;
தீது உரைசெய்தாய்; இனைய செய்கை
     சிதைவு அன்றோ?
மாதுலனும் ஆய், மரபின் முந்தை
     உற வந்தேன்,
ஈது உரை செய்தேன்; அதனை, எந்தை!
     தவிர்க' என்றான்.

    வேதனை செய் காம விடம் - துயரம் தருகின்ற காமம் என்ற நஞ்சு;
மேலிட மெலிந்தாய் - மிகுதிப்படச் சோர்வுற்றாய்; தீது உரை செய்தாய் -
கொடுஞ் சொற்களையும் கூறினாய்; இனைய செய்கை சிதைவு அன்றோ -
இவ்வாறு செய்தல் அழிவு ஆகுமன்றோ?; மாதுலனும் ஆய் - உனக்கு
மாமன் உறவுடையவனாய்; மரபின் முந்தை உற வந்தேன் - உன்
குலத்தில் முந்திப் பிறந்தவனானேன்; ஈது உரை செய்தேன் -
இம்மொழிகளை உனக்குச் சொன்னேன்; எந்தை - என ஐயா; அதனைத்
தவிர்க -
இத்தீய கருத்தை விட்டு விடுக; என்றான் - என (மாரீசன்
இராவணனுக்கு மறுபடியும் அறிவுரை பகன்றான்.

     உன் குலத்து முந்தியவன் என்பதால் நீ என்னைக் கடிந்த போதும்
நல்லன கூறினேன் என அறிவுரை கூறினான் மாரீசன். மாதாவின் உடன்
பிறப்பு மாதுலன்.                                             26

3263. என்ன, உரை அத்தனையும்,
     எத்தனையும் எண்ணிச்
சொன்னவனை ஏசின அரக்கர்
     பதி சொன்னான்: