3265. | 'மூஉலகினுக்கும் ஒரு நாயகம் முடித்தேன்; மேவலர் கிடைக்கின், இதன்மேல் இனியது உண்டோ? ஏவல் செயகிற்றி, எனது ஆணை வழி; எண்ணிக் காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ? |
மூவுலகினுக்கும் - மேல், நடு, கீழ் எனும் மூன்று உலகங்களுக்கு; ஒரு நாயகம் - தனி நாயகனாய்; முடித்தேன் - வெற்றி பெற்று முடித்தேன்; (அத்தகைய எனக்கு); மேவலர் கிடைக்கின் - (இன்னும் வெல்லுதற்குப்) பகைவர் கிடைப்பாராயின; இதன் மேல் இனியது உண்டோ - அதனினும் இனிதான ஒன்று வேறு உண்டோ; எனது ஆணை வழி ஏவல் செயகிற்றி - என் கட்டளைப்படி ஏவல் செய்வாயாக; எண்ணிக்காவல் செய் அமைச்சர் கடன் - சிந்தனை செய்து அரசுக்குப் பாதுகாப்புச் செய்யும் அமைச்சர் பொறுப்பை; நீ கடவது உண்டோ - நீ செய்யக் கருதுதல் பொருந்துமோ? (பொருந்தாது). என் பணி செய்வதே உன் கடமை. அறிவுரை மொழியும் அமைச்சர் பொறுப்பு உனக்கு உரியதன்று என்று மாரீசனுக்கு இராவணன் கூறினான். (அறிவுடைய அமைச்சன் நீ அல்லை) (7361) எனக் கும்பகருணனிடமும் இராவணன் கூறுதல் ஒப்புநோக்கத் தக்கது.29 3266. | 'மறுத்தனை எனப் பெறினும், நின்னை வடி வாளால் ஒறுத்து, மனம் உற்றது முடிப்பென்; ஒழிகல்லேன்; வெறுப்பன கிளத்தலுறும் இத் தொழிலை விட்டு, என் குறிப்பின்வழி நிற்றி, உயிர்கொண்டு உழலின்' என்றான். |
மறுத்தனை எனப் பெறினும் - என் கட்டளையை நீ மறுத்தாய் என்றாலும்; நின்னை - உன்னை; வடிவாளால் - என் கூர்மையான வாளால்; ஒறுத்து - வெட்டி; மனம் உற்றது முடிப்பென் - என் மனம் கருதியதை நிறைவேற்றுவேன்; ஒழிகல்லேன் - இந்நிலையிலிருந்து விலகமாட்டேன்; வெறுப்பன - நான் வெறுக்கும் அறிவுரைகளை; கிளத்தலுறும் இத்தொழிலை |